India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலர், நேற்று முன்தினம் (பிப்.15) பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர், இவரது கழுத்தில் இருந்த செயினை பறித்ததோடு, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவ்வாறு நடந்து கொண்ட சிட்லபாக்கத்தைச் சேர்ந்த சத்தியபாலுவிடம் ரயில்வே போலீசார் விசாரித்ததில், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளை அகற்றி ஒதுக்கப்பட்ட இடத்திற்கு 7 நாட்களுக்குள் கொண்டு செல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. குப்பை கழிவுகளை சாலையோரம், தெருக்கள் அல்லது காலியாக உள்ள இடங்களில் கொட்டக்கூடாது. மாநகராட்சியால் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கழிவுகள் கொட்டப்பட வேண்டும். மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த <
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், திமுகவில் உள்ள 22 அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் போட்டியான இன்று மேயர்கள் அணியின் கேப்டன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கிளீன் போல்ட் ஆனார். கிளீன் போல்ட் ஆகிவிட்டு நோ பால் கேட்டு அடம்பிடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சர்க்கரை நோயால், நடிகர் சிரிக்கோ உதயாவின் இடது கால் வெட்டி அகற்றப்பட்டது. இதுகுறித்து பேசிய அவரது மூத்த மகள், “அப்பா இப்போ நல்லா இருக்காங்க, சீக்கிரம் வீடு திரும்பனும்னு எல்லோரும் வேண்டிக்க கேட்கிறேன். இதுவரை சினிமா துறையில் உள்ளவர்களிடம் அப்பாவின் நிலை குறித்து தெரிவிக்கவில்லை. உதவி கேட்டு தொந்தரவு செய்யவும் விரும்பவில்லை. அவர் சீக்கிரமே பூரண குணமடைய வேண்டும்” என அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
நடிகர் சந்தானத்திற்கு நகைச்சுவை வசனங்கள் எழுதிய நகைச்சுவை நடிகர் ‘சிரிக்கோ உதயா’ நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் அவரது வலது கால் அகற்றப்பட்டது. திரைத்துறையில் கடந்த 35 ஆண்டுகளாக இருக்கும் இவர், சிறந்த வயலின் இசைக்கலைஞர், மிமிக்ரி செய்வதில் வல்லவர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார்.
பாடி பகுதியைச் சேர்ந்தவர் சபரிநாத் (36). இவர், தனது நண்பர்களான பள்ளிக்கரணை பிரபாகரன் (36), மதுரவாயல் உதய பாஸ்கர் (38), தரமணி ஜீவன்ராஜ் (20), ஆதம்பாக்கம் அப்துல் ஹக்கீம் (35) ஆகியோருடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றனர். இவர்களது கார், கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் அருகே நேற்று (பிப்.15) இரவு 12.45 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் சபரிநாத், பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத <
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பாஸ்கரனை மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடன் உள்ளதாகவும், அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் MLA கே.பி.சங்கர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மணலி பல்ஜி பாளையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பாஸ்கரன், சரவணகுமார் பணியாற்றி வந்தனர். நேற்று (பிப்.15) ஆலையில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில், ஆலையின் தூண்கள் பெயர்ந்ததுடன், சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய சரவணகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.