India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மெட்ரோ ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் 20 அல்லது அதற்கும் மேற்பட்டோர் குழுவாக காகித பயணச்சீட்டு வாங்கினால் 10% தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. இது நாளை முதல் திரும்ப பெறப்படுகிறது. அதற்கு பதிலாக அதே குழு பயணச்சீட்டை பயணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் 20% தள்ளுபடி கட்டணத்துடன் பெற்று கொள்ளலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில், 20 பேர் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவிற்கு 10% தள்ளுபடி கட்டணத்துடன் காகித பயணச்சீட்டாக வழங்கப்பட்டு வந்த குழு பயணச்சீட்டு பெறும் வசதி நாளை (மார்.1) முதல் திரும்பப் பெறப்படுகிறது என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அதே குழு மொபைல் செயலி மூலம் 20% தள்ளுபடி கட்டணத்துடன் பெற்று கொள்ளலாம்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஐந்துமாடி கட்டிடம் குலுங்கியதாகக் கூறி, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சாலையில் வந்து நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடம் லேசாக அதிர்ந்ததாக, ஊழியர்கள் அச்சத்துடன் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் பதிவாகாத அளவுக்கு சென்னையில் அதிர்வு வருவது வழக்கம் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மும்பையில் இருந்து சென்னை வந்த பயணிகளை குடியுரிமை துறை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 6 பேரிடம் தீவிர பரிசோதனை செய்தனர். அப்போது, அவர்கள் 6 பேரும் தங்கள் உள்ளாடைகளில் 3.5 கிலோ தங்க பசையை வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கப்பசையை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கடன் / தணிக்கை / அந்நிய செலாவணி ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் 60 – 63 வயது வரை இருக்கலாம். ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் <
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (பிப்.28) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ – மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோட் எடுத்துச் செல்லுங்கள்.
அண்ணா நகர் மேற்கு 5ஆவது தெருவில், லைசன்ஸ் இல்லாமல் சட்ட விரோதமாக நடத்தப்பட்ட ஸ்பாவில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் விசாரணை செய்தனர். இதையடுத்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 11 வடமாநில பெண்களை மீட்டு ஸ்பா மேனேஜர் உட்பட 3 பேரை கைது செய்தனர். ஸ்பாவில் இருந்து சுமார் ரூ.4 லட்சம் பணம், செல்போன்கள், லேப்டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் இன்று (பிப்.27) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிக்காக குடிநீர் விநியோகம் பல இடங்களில் நிறுத்தப்பட உள்ளது. சூளைமேடு, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கோடம்பாக்கம், தி.நகர், இராயப்பேட்டை, கோபாலபுரம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் 04.03.2025 காலை 10.00 மணி முதல் 05.03.2025 10.00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க.
சென்னை எழும்பூர் மற்றும் விழுப்புரம் இடையே நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக இன்று இரவு 8:05, 8:40, 11:05, 11:30, 11:59 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் (40569), (40571), (40089), (40091), (40093) எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்லும் என சென்னை கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.