Chennai

News March 5, 2025

சென்டர் மீடியனில் பைக் மோதி விபத்து

image

அடையாறு திரு.வி.க பாலத்தில் உள்ள சென்டர் மீடியனில் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துரைப்பாக்கத்தைச் சேர்ந்த கௌதம் ஹரி (22) நட்சத்திர விடுதியில் வேலை பார்த்து வந்துள்ளார். இன்று அதிகாலை பணியை முடித்துவிட்டு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து அரங்கேறியுள்ளது. இதில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 5, 2025

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (மார்ச். 04) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

News March 4, 2025

பல் மருத்துவத்தில் வேலை; கைநிறைய சம்பளம்

image

சென்னையில் பல் மருத்துவத்தில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon -Dental) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.17. இதற்கு BDS முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு <>இங்க கிளிக்<<>> பண்ணுங்க. மறக்காம ஷேர் பண்ணுங்க.

News March 4, 2025

அழகுசாதன பொருள் தயாரித்தல் பயிற்சி- அருமையான வாய்ப்பு 

image

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில், மூலிகை அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வரும் மார்ச்12- 14ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களை www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். யூஸ் பண்ணிக்கோங்க, மறக்காம ஷேர் பண்ணுங்க. 

News March 4, 2025

எனக்கு கற்றுத்தர கூடிய தகுதி யாருக்கும் இல்லை: சீமான்

image

சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “இதை எப்போதோ பேசி முடித்து இருக்க வேண்டும் என சொல்கிறார்கள். வார்த்தை நாகரீகம் சொல்லும் அந்த தலைவர்கள் யார்? அந்த நடிகையை ஒருத்தரும் கண்டிக்கவில்லை. வார்த்தை கண்ணியம் நாகரீகம் பற்றி யாரும் எங்களுக்கு கற்றுத்தர வேண்டியதில்லை. எங்களுக்கு கற்றுத்தர கூடிய தகுதி எந்த தலைவர்களுக்கும் இல்லை” எனத் தெரிவித்தார்.

News March 4, 2025

சிறுமியிடம் ஆபாச செயலில் ஈடுபட்ட வாலிபர்

image

சைதாப்பேட்டையைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, நேற்று (மார்.3) தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதேப் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (35) என்ற இளைஞர், சிறுமியின் முன்பாக தனது ஆடைகளை கழட்டி ஆபாச செயலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, சிறுமி பயந்து கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 4, 2025

சித்தா, ஆயுர்வேதா படித்தவர்களுக்கு அரசு வேலை

image

அரசு மருத்துவமனைகளில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 29 உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபட்சமாக 59 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் <>ஆன்லைன் <<>>வழியாக இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.

News March 4, 2025

கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்

image

போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்ட பேருந்துகள் இன்று (மார்ச் 4) முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலுருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள் 3795 பயணநடைகள் இயக்கப்பட்டு வருவதுடன் கூடுதலாக 104 பேருந்துகள் 816 பயணநடைகள் இயக்கப்படும். ஷேர் செய்யுங்கள்.

News March 4, 2025

ஆல்பர்ட் தியேட்டரின் கேண்டீன் உரிமம் ரத்து

image

சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பெண் ஒருவர் வீடியோ வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, உணவுப் பாதுகாப்புத்துறையினர் நேற்று (மார்.4) சோதனை நடத்தி, தியேட்டர் கேண்டீனின் உரிமத்தை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். மேலும், சென்னை முழுவதும் உள்ள திரையரங்குகளில் சோதனை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.

News March 3, 2025

மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்

image

இன்று இரவு 11:40, அதனை தொடர்ந்து 35 நிமிட இடைவெளியில் 12:15, ஆகிய நேரங்களில் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில்கள் (66007), (43001) முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இரவு 9 மணிக்கு சுலூர் பேட்டையில் இருந்து புறப்படும் மின்சார ரயில் கொருக்குப்பேட்டை – மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது என சென்னை கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது.

error: Content is protected !!