India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜின் என்ற ஹாா்மோன் அதிக அளவில் சுரக்கும். ஈஸ்ட்ரோஜின் அதிகமாக சுரக்கும் பருவத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மாரடைப்பும், இதய நோய்களும் பரவலாக ஏற்படுகிறது. குறிப்பாக, இதய தசை செயலிழப்பு (காா்டியோ மையோபதி) அதிகரித்துள்ளது. அதிலும் 20 – 35 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் பலா் அத்தகைய நோய்க்குள்ளாகி வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பக்தியோடு வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன்காரணமாக செல்வ விநாயகரை வழிபட பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, காலை 7:00 மணிக்கு மூலவர் விநாயகருக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
சூளைமேடு பகுதியில், OLX மூலம் அறையை பகிர்ந்த அந்தோணி என்ற இளைஞரின் லேப்டாப்பை, மணிகண்டன் என்ற நபர் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டனை கைது செய்த போலீசார் விசாரணையில்,லேப்டாப்பை ரிச்சி தெருவில் ரூ. 5000-க்கு அதனை விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் லேப்டாப்பை பறிமுதல் செய்து மணிகண்டனை போலீசார் சிறையில் அடைத்தனர். HOSTEL-லில் தங்கி இருக்கும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
சென்னை கடற்கரை முதல் எழும்பூர் வரை நான்காவது ரயில் பாதை அமைக்கும் பணியின் காரணமாக, வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 5:10 முதல் மாலை 4:10 வரை அந்த வழித்தடத்தில் புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் மாற்று ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
தலைமைச் செயலகத்தில் இன்று (மார்.7) செய்தியாளர்களை சந்தித்த கமிஷனர் அருண், “சென்னையில் மட்டும் 88,886 வாடகை வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து வாகனங்களுக்கும் QR கோடு ஒட்டப்பட்டுள்ளது. ஆட்டோவில் பயணிக்கும் பெண்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால், அவசர எண் ஒன்று வழங்கப்படும். அதற்கு தொடர்பு கொண்டால்போதும். அந்த வாகனம் எங்கு சென்றுள்ளது, உரிமையாளர் தொலைபேசி எண் அனைத்தும் வரும்” என்றார்.
சென்னை தேனாம்பேட்டையில் வேலை இழந்ததால் மனமுடைந்து அலுவலகத்திலேயே பெண் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழும் இவர், தனது குழந்தைகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. பயங்கர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அந்நிறுவனத்தின் HR-ஐக் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (TASMAC) தலைமை அலுவலகத்தில் 2ஆவது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. இதுகுறித்து சென்னையில் இன்று (மார்.7) செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “விஞ்ஞான ஊழலை நிறுவனமயமாக்கி, தமிழ்நாடு அரசு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை வரும் வெட்கக்கேடான நிலைக்கு அரசு தள்ளியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது” எனத் தெரிவித்தார்.
பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடற்கரையில் இருந்து இன்று (மார்.7) இரவு 7.30, 8.55, 10.20, 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன. அதேபோல், கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.40, 11.15 மணிக்கும், செங்கல்பட்டில் இருந்து இரவு 10.10, 11 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.
IDBI வங்கியில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 650 காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த 20-25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுபர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <
நங்கநல்லூரைச் சேர்ந்தவர் முரளிதரன் (65). இவரது மகன் ஆதித்ய நாராயணன் (28) பொறியியல் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர். ஆனால், சற்று மனநலம் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. தந்தை – மகனிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ள நிலையில், 2 தினங்களுக்கு முன் கத்திரிக்கோலால் தந்தையின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் ரத்தக்கறையுடன் ஆட்டோவில் சென்றபோது, போலீசாரிடம் பிடிபட்டார்.
Sorry, no posts matched your criteria.