India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘மகளிர் விடியல் பயணம்’ என்ற திட்டத்தின் மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 126.53 கோடி பெண்கள் மாநகர பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணம் செய்துள்ளனர். தினம்தோறும் பேருந்துகளில் 12.07 லட்சம் பெண்கள் பயணம் செய்கிறார்கள். மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் தினம்தோறும் 1,654 மகளிர் விடியல் பயண பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பள்ளி மாணவிகள் தேவைக்காக தினந்தோறும் 210 தனி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை மாநகராட்சியின் 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட், வரும் மார்ச் 19ஆம் தேதி ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்யப்படுகிறது. மேயர் பிரியா தலைமையில் தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட்டில், மெட்ரோ ரயில் திட்டம், போக்குவரத்து மேம்பாடு, புதிய மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம், மழைநீர் வடிகால் திட்டங்கள் மற்றும் மாநகராட்சியை அழகுபடுத்தும் பணிகள் இடம்பெற இடம்பெறும் என்று மக்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
சென்னை மாநகராட்சி, வரும் 19ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில், பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள், 200 வார்டுகள் உள்ளன. நடப்பாண்டு பட்ஜெட் தொடர்பாக மேயர் பிரியா தலைமையில் ஆலோசிக்கப்பட்டு, மக்களின் தேவைகள், சாத்தியமுள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தி பட்ஜெட் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4ஆவது புதிய ரயில் பாதையின் இறுதிக்கட்ட பணிகள், நாளை (மார்ச் 9) நடக்க உள்ளன. இதனால், கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு தடத்தில் அதிகாலை 5:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை என 11 மணி நேரம் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், பயணியர் வசதிக்காக தாம்பரம் – கோடம்பாக்கம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மினோகா, இனோகா என்ற 2 வேறு வகையான மாரடைப்பு பாதிப்பு இளம்பெண்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது. சா்க்கரை நோய், தவறான உணவுப் பழக்கம், உயா் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, மரபணு பாதிப்பு, மன அழுத்தம் ஆகியவைதான் முக்கிய காரணம். இதயத்துக்குச் செல்லும் குறுநாளங்களில் அடைப்பு ஏதும் இன்றி ரத்த ஓட்டம் தடைபடும். மிகவும் சிக்கலான இந்த நோய்களுக்கு 18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா்.
எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு உறுதியான காரணம் இல்லை. 30 வயதைக் கடந்த பெண்களுக்கு எவ்வாறு மாா்கப் புற்றுநோய் பரிசோதனை அவசியமோ, அதுபோலவே 20 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாவது பெண்கள் இதய நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மகளிா் தினத்தில் இதய நலம் காப்பதற்கான உறுதிமொழியை அனைத்துப் பெண்களும் மேற்கொண்டால் ஆரோக்கியமான சமூகம் அமையப்பெறும். ஷேர் செய்யுங்கள்
மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜின் என்ற ஹாா்மோன் அதிக அளவில் சுரக்கும். ஈஸ்ட்ரோஜின் அதிகமாக சுரக்கும் பருவத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மாரடைப்பும், இதய நோய்களும் பரவலாக ஏற்படுகிறது. குறிப்பாக, இதய தசை செயலிழப்பு (காா்டியோ மையோபதி) அதிகரித்துள்ளது. அதிலும் 20 – 35 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் பலா் அத்தகைய நோய்க்குள்ளாகி வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தலைமை நீர் பகுப்பாய்வகத்தில், வேதியியலாளர், ஆய்வக நுட்பறிஞர், ஆய்வக உதவியாளர் என 36 காலிப் பணியிடங்கள் உள்ளன. ரூ.8,500 முதல் ரூ.21,000 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் விண்ணப்பங்களை cwadph.chn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் மார்ச் 11ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம் வல்லுனர், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. ரூ.32,500 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும். இன்ஜினியரிங் படிப்பில் டிகிரி பெற்றவர்கள் வரும் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்
பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் இன்று (மார்.8) காலை 10 மணி – பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல் / நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். ரேஷன் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.
Sorry, no posts matched your criteria.