India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பசுமை எரிசக்தி கழகத்துடன் இணைந்து, 89 பார்க்கிங் இடங்களில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. மாநகராட்சி நிலங்களை அடையாளப்படுத்தியதற்கு பிறகு சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இதன் மூலம் எலக்ட்ரிக் கார், பைக்கிற்கு சார்ஜ் செய்யலாம்.
சென்னையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ‘செந்தமிழ் நாட்டு தமிழச்சி’ பாடலுக்கான ரீல்ஸ் போட்டி நடைபெறுகிறது. புதிய ஹூக் ஸ்டெப் உருவாக்கி #செந்தமிழ் நாட்டு தமிழச்சி’ என்ற ஹாஷ்டாக்குகளை பயன்படுத்தி சமூக ஊடக கணக்குகளில் பகிரவும். உங்கள் படைப்புகளை வரும் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். சிறந்த படைப்புக்கு அமைச்சர் சாமிநாதன் பரிசு வழங்குகிறார்.
சென்னையில், தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில், 20,000 கடைகள் உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது. இவற்றில், பாரிமுனை, சௌகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருப்பது குறித்து புகார்கள் வந்துள்ளன. இந்த கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி சரி செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
ஓட்டேரியைச் சேர்ந்த பத்மினி, தனது மகனுடன் நேற்று (மார்.11) இரவு பைக்கில் ஐ.சி.எப் கான்ஸ்டபிள் சாலையில் சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த லாரி பைக் மீது மோதியதில், கீழே விழுந்த பத்மினியின் தலை மீது லாரி ஏறியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், பத்மினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாடு அரசு Mobile App Developer பணிக்கு இலவச படிப்பை வழங்குகிறது. இந்த படிப்பு மூலம் செயலிகளை உருவாக்குவும், செயல்படுத்தவும் முடியும். 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ரூ.35,000 – ரூ.45,000 வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். GRIT Talents, Gradianty, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய நிறுவனங்களில் <
கோவிலம்பாக்கம், காந்திநகர் 15ஆவது தெருவில் வசித்து வந்த முனுசாமி (75) என்பவரது வீட்டில் கடந்த 5ஆம் தேதி கேஸ் கசிவு ஏற்பட்டது. மறுநாள் காலையில் வீட்டார் சுவிட்சை போட்டவுடன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், 5 பேரும் உடல்கருகி கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சாந்தி (45), அஜித்குமார் (27), முனுசாமி (75) ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி நேற்று (மார்.11) உயிரிழந்தனர்.
சென்னையில் இன்று (மார்.12) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருசில இடங்கங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் வெளியே செல்லுங்கள். நேற்று அடையாறு, அம்பத்தூர், கோயம்பேடு, சைதாப்பேட்டை, ராயபுரம் போன்ற பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
பார்த்தசாரதி கோயில்(திருவல்லிக்கேணி), கபாலீஸ்வரர் கோயில்(மயிலாப்பூர்), வடபழனி முருகன் கோவில்(வடபழனி), அஷ்டலட்சுமி கோவில்(பெசன்ட் நகர்), மருதீஸ்வரர் கோவில்( திருவான்மியூர்), கந்தசாமி கோவில்(கந்தகோட்டம்), தேவபுரீஸ்வரர் கோவில்(திருவேற்காடு), காமாட்சி அம்மன் கோவில்( மாங்காடு), பாலசுப்பிரமணியர் கோவில்(சிறுவாபுரி), தேவநாதப்பெருமாள் கோவில்(செட்டிப்புண்ணியம்). ஷேர் பண்ணுங்க.
சென்னை சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் ஒரு முறை பிடிபட்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் ரூ.10,000 எனவும், அதே மாடு 2-வது முறை பிடிபட்டால் ரூ.15,000 வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது. அதன்படி கடந்த ஆண்டு முதல் மொத்தமாக இதுவரையில் 3,221 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.1 கோடியே 46 லட்சத்து 80 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.