Chennai

News March 14, 2025

பெட்ரோல் விலை குறைந்துள்ளது

image

கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில், பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக மாற்றமின்றி இருந்த நிலையில், இன்று (மார்.14) 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், டீசல் ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் 20 காசுகள் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News March 14, 2025

பட்ஜெட்: அதிவேக ரயில் போக்குவரத்தை உருவாக்க ஆய்வு

image

விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மித அதிவேக ரயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். சென்னை – திண்டிவனம் – விழுப்புரம் மற்றும் சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் ஆகிய வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும என 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

News March 14, 2025

பட்ஜெட்: டிசம்பரில் வரும் போரூர் மெட்ரோ

image

சென்னை பூந்தமல்லி – போரூர் மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். மேலும், விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு – பட்டாபிராம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9744 கோடியும், பூந்தமல்லி – ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News March 14, 2025

பட்ஜெட்: சென்னையில் புதிய நீர்த்தேக்கம்

image

சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மழை வெள்ள நீரை சேமிக்க சென்னையில் புதிய நீர்த்தேக்கமும், கோவளம் அருகே உபவடி நிலத்தில் 3,010 ஏக்கர் பரப்பில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேகரிக்கும் வகையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்.

News March 14, 2025

பட்ஜெட்: சென்னைக்கு அருகே 2,000 ஏக்கரில் புதிய நகரம்

image

நாட்டிலேயே அதிக நகரமயமாக்கல் சவாலை தமிழ்நாடு சந்தித்து வருகிறது. இதற்கேற்ற, குடிநீர், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்கின்றன. எனினும் புதிய நகரங்கள் அமைக்கும் தேவை உள்ளது. சென்னைக்கு அருகே 2,000 ஏக்கரில் புதிய நகரம் அமைக்கப்படும். சென்னையை புதிய நகருடன் இணைத்திட போக்குவரத்து, மெட்ரோ வழித்தட நீட்டிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

பட்ஜெட்: வேளச்சேரியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்

image

2025-26 தமிழ்நாடு பட்ஜெட்டில், சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ., தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும். திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும். அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

பட்ஜெட்: சென்னையில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம்

image

2025-26ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று (மார்.14) சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில், சென்னை மாநகரப் பகுதியில், முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீரை, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும். புதிதாக 7 மழைநீர் உறிஞ்சு பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

News March 14, 2025

சௌகார்பேட்டையில் ஹோலி கொண்டாட்டம்

image

சென்னை சௌகார்பேட்டையில் இன்று (மார்.14) ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இளம் வயதினர், தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கலர் பொடி பூசியும், கலர் கலந்த தண்ணீரை அடித்தும் கொண்டாடினர். இதனால் சௌகார்பேட்டையே வண்ணமயமாக மாறியது. இதுதவிர, சேத்துப்பட்டு, கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆயிரக்கணக்கானோர் ஹோலி கொண்டாடினர். நீங்களும் மறக்கமா கலர் பூசி ஹோலி கொண்டாடுங்க.

News March 14, 2025

ஹோலி கொண்டாட ஆசையா?

image

இந்தியா முழுவதும் இன்று (மார்.14) ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. வடஇந்தியர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு சென்றால் நாம் ஹோலி கொண்டாடலாம். குறிப்பாக, சவுகார்பேட்டை, கீழ்பாக்கம், வெப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர் மற்றும் சேத்துப்பட்டு ஆகிய இடங்களுக்கு சென்றால் ஹோலி கொண்டாடலாம். ஹோலி பண்டிகையை கொண்டாட பெரும்பாலும் இளம் வயதினரே விரும்புகின்றனர். இந்த இடங்கள் அவர்களுக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கும்.

News March 13, 2025

20 வங்கிகளில் மருத்துவர் கடன் வாங்கியுள்ளதாக தகவல்

image

சென்னை: திருமங்கலத்தில் 5 கோடி கடன் பிரச்சனை காரணமாக இரு மகன்களை கொலை செய்து, மருத்துவர் பாலமுருகனும் (52), அவர் மனைவி வழக்கறிஞர் சுமதியும் (47) இன்று காலை குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர். காவல்துறை விசாரணையில், மருத்துவர் பாலமுருகன் 20க்கும் மேற்பட்ட வங்கிகளில் கடன் வாங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

error: Content is protected !!