Chennai

News April 8, 2025

சட்டக்கல்லூரி மாணவி மீது தாக்குதல்

image

அண்ணா சாலையில் நேற்று (ஏப்ரல் 7) தனியார் சட்டக்கல்லூரி மாணவியை தாக்கிய, சாந்தோம் டுமிங் குப்பத்தைச் சேர்ந்த ஆகாஷ் (22) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். மாணவியின் ஆண் நண்பரை ஆகாஷ் தினமும் பார்ட்டிக்கு அழைத்துச் செல்வது குறித்து மாணவி கேட்டபோது, தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News April 8, 2025

டேபிள் பேனை இயக்கியபோது மின்சாரம் தாக்கி பலி

image

பட்டாளம் பகுதியை சேர்ந்த சூர்யா (11) என்ற சிறுவன், நேற்று (ஏப்ரல் 7) தனது வீட்டில் உள்ள டேபிள் பேனை இயக்கியுள்ளார். அப்போது, ஊக்கை கொண்டு டேபிள் பேனை இயக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவனை மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட சிறுவனை, குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

News April 7, 2025

சென்னை எம்.டி.சியில் வேலை வாய்ப்பு

image

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் இளம் பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு விதிகளை பின்பற்றி தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. என்ஜினியரிங், டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் 2021 – 24ஆம் ஆண்டில் டிகிரி முடித்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். <>https://nats.education.gov.in<<>> என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News April 7, 2025

அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

சென்னை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 184 அங்கன்வாடி பணியிடங்கள், 22 குறு அங்கன்வாடி பணியிடங்கள், 102 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். 23ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்கலாம்<<>>. ஷேர் பண்ணுங்க

News April 7, 2025

தம்பி கண் எதிரேயே அக்கா தூக்கிட்டு தற்கொலை

image

பொழிச்சலூர் எம்.ஜி.ஆர்.நகர் மூர்த்தி தெருவைச் சேர்ந்த ரோஷினி (10), 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது தாய் கவுசல்யா நேற்று (ஏப்ரல் 6) வேலைக்கு சென்றுவிட்டு வருவதற்குள் வீட்டு வேலைகளை செய்து வைக்கும்படி ரோஷினியிடம் கூறியுள்ளார். ஆனால் ரோஷினி, வீட்டு வேலைகள் எதுவும் செய்யவில்லை. இதனால் தனது தாய் தன்னை அடிப்பாரோ? என பயந்த ரோஷினி தனது தம்பி கண் எதிரேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News April 7, 2025

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

image

சென்னையில் இன்று (ஏப்ரல் 7) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தெற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்

News April 6, 2025

சென்னை மாவட்ட கலெக்டர்கள் விவரம்

image

சென்னை மாவட்டத்தின் முதல் கலெக்டராக என்.எஸ். அருணாசலம் 17/07/1947 அன்று பதவி ஏற்றார். அவரை சேர்த்து தற்போது வரை மாவட்டத்தில் 75 கலெக்டர்கள் பதவி வகித்துள்ளனர். ஆம், இதில், 26 பெண்கள், 49 ஆண்கள். 75ஆவது கலெக்டராக ரஷ்மி சித்தார்த் ஜகடே 13/09/2023 அன்று பதவியேற்று இன்று வரை அவர் ஆட்சியராக உள்ளார் . உங்களுக்கு பிடித்த கலெக்டர் யார்? * தெரிந்த நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்*.

News April 6, 2025

மெட்ரோ போக்குவரத்தை அதிகரிக்க கோரிக்கை

image

நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் திரையரங்குக்கு செல்ல குடும்பத்துடன் அதிகம் பேர் பயணம் செய்கின்றனர். மெட்ரோவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான போக்குவரத்து கிடையாது. இதனால் கூட்ட நெரிசலின்றி பயணம் செய்ய பயணிகள், ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக மெட்ரோவை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 6, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து வரும் மே மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்.

News April 6, 2025

மாமூல் கேட்டு மிரட்டிய அதிமுக நிர்வாகி கைது

image

ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் உள்ள ஹோட்டலில் இன்று (ஏப்ரல் 6) மாமூல் கேட்டு மிரட்டிய புகாரில் அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். மாற்றுத்திறனாளி அப்துல் ரகுமானிடம் மாமூல் கேட்டு மிரட்டிய அதிமுக 120ஆவது வட்ட செயலாளர் ஐஸ்அவுஸ் மூர்த்தி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மூர்த்தியிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!