India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் பிரபல கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ், தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இவர், கடந்தாண்டு தனது வீட்டில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அந்த சிறுமிகள் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, சென்னை மண்டல உதவி ஆணையர் மற்றும் <
போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை போலீசார் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான டேட்டிங் ஆப் Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கடிதம் எழுதியுள்ளார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகும் 10ல், 5 பேர் இந்த செயலியை பயன்படுத்துவது உறுதியாகியுள்ளதாக அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
▶️சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர், 044-25228025 ▶️சென்னை மாநகராட்சி ஆணையாளர், 044-25381330 ▶️ சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர், 044-23452345 ▶️ மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், 044-27662400 ▶️ மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர், 044-24714758 ▶️ லஞ்ச ஒழிப்புத் துறை, 044-22310989. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
சென்னை சென்டிரல் – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் உள்பட 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி – கவரைப்பேட்டை இடையேயான ரயில் நிலைய பாதையில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை (6 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள நகர்புற சுகாதார நல மையங்களில் 345 பணியிடங்கள் உள்ளன. மருத்துவ அதிகாரி, நர்ஸ், சுகாதார பணியாளர், சமூக சேவகர், பேறுகால பணியாளர், எக்ஸ்ரே வல்லுநர், சப்போர்ட் ஸ்டாஃப் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் நாளை 5 மணிக்குள் ரிப்பன் மாளிகைக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஷேர் செய்யுங்க
அக்னிவீர் திட்டத்தின்படி, ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியான இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த லிங்கை <
சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு புறப்பட்ட அரசு பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியார் பேருந்துடன் பலமாக மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்து வயல்வெளியில் கவிழ்ந்தது. படுகாயமடைந்த 20 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அண்ணா நகரில், சைக்கிளில் சென்ற இளைஞர் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்த அனுகூல் என்பவர் நேற்று (ஏப்ரல் 9) சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த காரின் கதவை திடீரென திறந்ததால், நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மற்றொரு கார் அனுகூலின் தலையில் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழியில் மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் உள்ளது. இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கினால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்தாலே ஆத்மா சுத்தமாகுமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.