Chennai

News May 8, 2024

சென்னை: மாணவர்கள் 20 பேர் மீது வழக்கு!

image

சென்னை, சென்ட்ரல் அருகே பேருந்தின் கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். புதுக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 20 பேர் மீது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 8, 2024

சென்னை: பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு வலை!

image

சென்னை, பெரம்பூர் பகுதியில் நேற்று(மே 7) பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், டியோ பைக்கில் சாகசம் செய்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆபத்தான முறையில் விபரீதம் அறியாமல், இளைஞர்கள் வீலிங் செய்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், வாகனத்தின் பதிவெண் கொண்டு இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் பைக் சாகசம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

News May 8, 2024

சென்னை: அதிகாலை பெய்த மழை!

image

சென்னையில் கோடை வெப்பம் வாட்டி வந்ததால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் வெப்பத்தை தணிக்கும் விதமாக, சில பகுதிகளில் இன்று(மே 8) அதிகாலை திடீரென மழை பெய்தது. சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், வடபழனி, தாம்பரம், பல்லாவரம், நந்தனம், ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சற்றே குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

News May 8, 2024

சென்னை: வேர்கடலையை விழுங்கிய குழந்தை பலி

image

சென்னை, ஜாபர்கான்பேட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் சரவணன்(32). இவருக்கு நிரஞ்சன் சாய் எனும் 1 வயது ஆண் குழந்தை இருந்தது. 2 நாட்களுக்கு முன்பு, கீழே இருந்த வேர்கடலை பருப்பை எடுத்து குழந்தை சாய் விழுங்க முயற்சித்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை நேற்று(மே 7) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

News May 7, 2024

முதியோர் இல்லத்தில் கேக் வெட்டிய நடிகர் 

image

நடிகர் அப்புக்குட்டி தனது பிறந்தநாளை, சென்னை கோடம்பாக்கம் அன்னை உள்ளம் ஆதரவற்ற பெண்கள் முதியோர் இல்லத்தில், கேக் வெட்டிக் தனது பிறந்த நாளை கொண்டாடினார். தொடர்ந்து முதியோர்களுக்கு உணவு பரிமாறினார். மேலும், அவர்களின்  மருத்துவச் செலவிற்கு தேவையான உதவித் தொகை வழங்கி, அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

News May 7, 2024

சென்னையில் மின்தேவை புதிய உச்சம்

image

சென்னை மாநகரில் மின்தேவை புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 3 ஆம் தேதி 4,470 மெகாவாட்டாக இருந்ததே உச்சமாக இருந்த நிலையில், நேற்று (மே 6) இரவு 10.30 மணிக்கு 4,590 மெகாவாட்டாக மின்தேவை உயர்ந்துள்ளது. மேலும், மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்தாலும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

பாஜக பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி சோதனை

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை நீலாங்கரையில் உள்ள பாஜக பிரமுகர் கோவர்த்தனன் வீடு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது ஓட்டல் ஆகிய இடங்களில் சிபிசிஐடி சோதனை நடத்தி வருகிறது. 6 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவர்தன் மற்றும் அவரது மகனிடமும் சிபிசிஐடி விசாரணை நடத்தியுள்ளது.

News May 7, 2024

“எலும்பை உடைக்கும் அளவுக்கு வலிமையான நாய்”

image

சென்னையில் உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை மே 5 ஆம் தேதி ராட்வீலர் நாய்கள் கொடூரமாக கடித்து குதறின. இந்த வகை நாய்களை கூண்டில் வளர்ப்பதுதான் நல்லது. எலும்பை கடித்து உடைக்கும் அளவுக்கு அதன் தாடைகள் வலுவானது. இந்தியா மட்டுமின்றி இஸ்ரேல், ரஷ்யா, ஸ்பெயின், உக்ரைன், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் இந்த வகை நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

News May 7, 2024

சென்னையில் 55 ஸ்பாக்களுக்கு சீல்!

image

சென்னை கோயம்பேடு, அண்ணாநகர் பகுதிகளில் 55 ஸ்பாக்களுக்கு இன்று(மே 7) போலீசார் சீல் வைத்துள்ளனர். உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்ததாக ஸ்பாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பாக்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடைபெற்ற நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 7, 2024

தெற்கு ரயில்வே அட்டவணையில் மாற்றம்

image

சென்னை கடற்கரையில் இருந்து இன்றிரவு 8.35 மற்றும் 10.05 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறு மார்க்கத்தில், இந்த ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து இயங்கும். இது தவிர காட்பாடி- ஜோலார்பேட்டை சிறப்பு ரயில் மே 8, 10 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!