India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே 14 மாதங்களுக்கு பிறகு இன்று முதல், ரயில் சேவை தொடங்கியது. இதில் பணிகள் முழுமையாக நிறைவடையாததால், பார்க் டவுன் ரயில் நிலையத்தில் மட்டும், தற்காலிகமாக ரயில்கள் நிற்காது என ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, வேளச்சேரியில் இருந்து வரும் ரயில்களும், கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் ரயில்களும், பார்க் டவுன் ரயில் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து 226-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. Non- Executive பணியாளர்களுக்கு ரூ.15,000 போனஸ் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என சிஐடியூ சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையை கொண்டாட, மக்கள் அதிக அளவில் பட்டாசுகளை பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘2022ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 61ன் கீழ் மெட்ரோ ரயிலில் பட்டாசுகள் உட்பட எளிதில் பற்றி எரியக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 1ஆம் தேதி மகாவீர் நிர்வான் தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும், அன்றைய தினம் மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஜெயின் கோவில்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டு இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என்றும், சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் பொழுது கவனமாக வெடிக்க வேண்டும் என்றும் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை ஓராண்டுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது. கடற்கரை – எழும்பூர் 4ஆவது ரயில் பாதை பணிகளுக்காக கடந்தாண்டு ஆக.28ஆம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையே மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டன. இன்று காலை சென்னை கடற்கரையில் இருந்து காலை 4.53 மணிக்கு முதல் ரயிலும், வேளச்சேரியில் இருந்து காலை 4.00 மணிக்கு முதல் ரயிலும் இயக்கப்பட்டது.
கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன், தீபாவளி தீக்காய சிறப்பு உள்நோயாளிகள் பிரிவினை திறந்து வைத்து, பார்வையிட்டார். இந்நிகழ்வில் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி முதல்வர் லியோ டேவிட், மருத்துவத்துறை பேராசிரியர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.
தீபாவளியை ஒட்டி சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகளில் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரைக்கான தேதியில் 1,31,828 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தீபாவளியை ஒட்டி 3 நாட்களில் 11,176 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 2,910 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Sorry, no posts matched your criteria.