Chennai

News July 5, 2025

ஊர்க்காவல் படையில் வேலை

image

சமூக சேவகர்கள், ஆசிரியர்கள், உயர் பதவி வகிப்பவர்கள், சுயதொழில் புரிபவர்கள், உயர் தகுதி வாய்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் பொது நல தொண்டில் ஈடுபாடு கொண்ட சேவை செய்ய விருப்பம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை பெருநகர ஊர்காவல்படை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை, சென்னை – 15 என்ற முகவரிக்கு உங்கள் சுயவிவரத்தை தபால் அனுப்பலாம்.

News July 5, 2025

மடிப்பாக்கத்தில் ஐந்து வயது சிறுமி பலாத்காரம் – ஆயுள் தண்டனை

image

மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஐந்தரை வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள ஏசு என்பவர் வீட்டிற்கு சென்று விளையாடுவது வழக்கம். கடந்த 2018 மார்ச் 11ம் தேதி, அங்கு சென்று விளையாடிய சிறுமியை, ஏசு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மடிப்பாக்கம் மகளிர் போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏசு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

News July 5, 2025

சென்னையில் கலைச்செம்மல் விருது விண்ணப்பிக்க அழைப்பு

image

மரபு வழி, நவீன பாணி ஆகிய நுண்கலை துறைகளில் சிற்ப கலைஞர்களின் சாதனை, சேவைகளை பாராட்டி, ஆண்டுதோறும் ஆறு பேருக்கு, தமிழக கலை, பண்பாட்டுத் துறை சார்பில், கலைச்செம்மல் விருது வழங்கப்படுகிறது. வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு இயக்குநர், கலை, பண்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ் சாலை, எழும்பூர். 044 – 2819 3157 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

News July 5, 2025

அயப்பாக்கம் துாய்மை பணியாளர் நேர்மைக்கு தங்க மோதிரம் பரிசு

image

அயப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பணியாற்றும் ஜெயமணி, துாய்மை பணி மேற்கொண்டார். கடந்த 27ம் தேதி நடந்த திருமணத்திற்கு வந்திருந்த மாடம்பாக்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் – மீனாட்சி தம்பதி, தவறவிட்டது தெரிந்தது. 25 லட்சம் மதிப்பிலான நகைகள் அடங்கிய பை, நேற்று தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயமணியின் நேர்மையை பாராட்டி, தம்பதி அவருக்கு அரை சவரன் மோதிரத்தை பரிசளித்தனர்.

News July 5, 2025

சென்னையில் இன்று கரண்ட் கட்

image

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று பராமரிப்பு பணி காரணமாக மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை போரூர், குன்றத்தூர் பிரதான சாலை, கே.கே. நகர், பெரம்பூர், பல்லாவரம், திருநீர்மலை, துரைபாக்கம், திருமுடிவாக்கம், கோயம்பேடு, சென்னையையடுத்த தாம்பரம், செம்பரம்பாக்கம், பகுதிகளில் கரண்ட் கட் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அதற்கு தகுந்தார் போல் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

News July 4, 2025

சென்னையில் 300 மாமன்ற கவுன்சிலர்கள் தேர்வு

image

பெருநகர சென்னை மாநகராட்சிபகுதியில் தற்போதுள்ள 200 வார்டுகளைவிட 2026 ஆம் ஆண்டு இறுதியில் 300 மாமன்ற கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்காக ரிப்பன் பில்டிங் மாளிகையில் ரூபாய் 62.50 கோடி மதிப்பில் புதிய மாமன்ற அலுவலகம் கட்டுவதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது, இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 4, 2025

சென்னை மக்களே போலிஸ் அடித்தால் என்ன செய்யலாம் ?

image

காவல்துறையினர் நியாயமற்ற சோதனை, பறிமுதல், தாக்குதல், வாய்வழி துன்புறுத்தல் அல்லது தொல்லை, சட்ட விரோத கைது அல்லது தடுப்புக்காவல், முறையான நடைமுறைகளை பின்பற்றத் தவறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனித உரிமைகள் ஆணையம்/காவல் கண்காணிப்பாளர்/ மஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கலாம். புகார் செய்யும் போது சாட்சி கணக்குகள், மருத்துவ பதிவுகள் (காயமடைந்திருந்தால்), வீடியோ பதிவுகள் (இருந்தால்)
புகைப்படங்கள் தேவை.

News July 4, 2025

சென்னை மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் 1/2

image

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில் இந்த லிங்க் மூலம் அல்லது (044‑2495 1495) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மேலும், மாவட்ட கமிஸினரிடமொ (044-23452345) , மாவட்ட மாஜிஸ்திரேட்டிடமும் புகார் செய்யலாம். இந்த எண்களை நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்

News July 4, 2025

தோமையார் மலை தேவாலயம் உலக புகழ் பெற்றதாக அறிவிப்பு

image

வாடிகனுக்கான இந்திய துாதர் லியோ போல்டோ ஜெரேலி நேற்று (ஜூலை 3), புனரமைக்கப்பட்ட புனித தோமையார் மலை தேவாலயத்தை, உலக புகழ் பெற்றதாக அறிவித்தார். இது தொடர்பான சிறப்பு மலரை அவர் வெளியிட, சபாநாயகர் அப்பாவு பெற்றுக் கொண்டார். விழாவில், அமைச்சர்கள் அன்பரசன், நாசர், ராஜேந்திரன் பங்கேற்றனர். புனித தோமையார் பெருவிழா, இன்று (ஜூலை 4) மாலை கொடியேற்றத்துடன் துவங்கி, வரும் 6ம் தேதி வரை நடக்கிறது.

News May 8, 2025

டிகிரி போதும் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

image

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து இன்று முதல் ( மே.08) வரும் 20.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிராதீங்க. வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!