India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மெட்ரோபொலிட்டன் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் (CMWSSB) பொதுமக்கள் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க, புதிய Grievance Redressal System அமைத்துள்ளது. குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான பிரச்சனைகளை தெரிவிக்க 044-4567 4567 (20 லைன்கள்) என்ற எண்ணிலும், இலவச தொலைபேசி எண் 1916 மூலமாகவும் புகார் அளிக்கலாம். மேலும் QR கோடு ஸ்கேன் செய்தும் புகார் பதிவு செய்யலாம்.
சென்னை முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 6, 135 உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களின் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக ரூ.122.7 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் பெண் உற்பத்தியாளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இன்றும் (ஜூலை 5) அதே விலையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், 1 லிட்டர் டீசல் ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கட்டுமான தொழிலார்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் தொழிலாளர்கள் போன்ற ESIC or EPFO போன்ற திட்டங்களில் கீழ் வராத தொழிலார்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலார்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்தியஅரசு திட்டங்களை பெற முடியும். உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்
அமைப்பு சாரா தொழிலார்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். இந்த <
செம்மஞ்சேரியில், 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், முதல்கட்டமாக 76.44 ஏக்கரில் கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், நீச்சல், படகு சவாரி, ஸ்கேட்டிங்கில் மற்றும் பிஎம்எக்ஸ் சைக்கிள் சாகச விளையாட்டு போன்ற விளையாட்டுகளுக்கான இடங்கள் அமைக்கப்பட உள்ளது. உள்விளையாட்டு அரங்கம், வீரர்கள் தங்கும் விடுதிகள் போன்ற வசதிகளும், படகு சவாரி செய்யும் வசதியும் வருகிறது.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், பல மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அலுவலகம் மற்றும் கல்வி நோக்கில் பயணித்த நூற்றுக்கணக்கானோர் பேருந்துகள், ஆட்டோக்களில் நெரிசலில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முன்கூட்டியே அறிவிக்கவில்லை என பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி K. பழனிசாமி, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேற்று (ஜூலை 4), அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள T.G. வெங்கடேஷ்பாபு, Ex. M.P., நேரில் சந்தித்து பூங்கொத்து அளித்து வாழ்த்து பெற்றார். இதில் அதிமுக தொண்டர்கள் உடனிருந்தனர்.
சென்னை முழுவதும் ரூ.5 லட்சம் செலவில் நிறுவப்பட்ட 49 ஸ்மார்ட் கம்பங்கள் தற்போது செயலிழந்துள்ளன. SOS பொத்தான், Wi-Fi, சிசிடிவி உள்ளிட்ட வசதிகள் செயல்படவில்லை. பராமரிப்பு ஒப்பந்தம் செயல்படாததாலும், விழிப்புணர்வு இல்லாததாலும் பொதுமக்கள் பயனடையவில்லை. ஜிசிசி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் கூட்டம் நெரிசலாம் பகுதியில் மக்கள் இணையவசதி இல்லாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
சென்னை சர்வதேச கழிப்பறை விழா 3.0 இன் ஒரு பகுதியாக ஜூலை 5 அன்று, ஜிஎச்சி நடத்திய இரண்டு நாள் ‘டாய்லெட் லே டண்டனக்கா’ விழா கலைவாணர் அரங்கத்தில் தொடங்கப்பட்டது. வாஷ் லேப், ரீசைக்கிள் பின் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்ட இவ்விழாவில், 124 பள்ளிகளில் இருந்து 661 மாணவர்கள் கலைப்போட்டிகள் கலந்து கொண்டனர். ‘லூ கான்க்ளேவ்’ குழு விவாதங்களும் நடைபெற்றன. கழிவரை,சுகாதாரம் குறித்தான விழிப்புணர்வு இது
Sorry, no posts matched your criteria.