Chennai

News October 9, 2024

ஆயுத பூஜை விடுமுறை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

ஆயுத பூஜை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து இன்றும் (அக்.9), நாளையும் (அக்.10) சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கத்திலிருந்து 1,105 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 300 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 110 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து 200 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

News October 9, 2024

மாணவர் மரணம்: கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு

image

மாநிலக் கல்லூரியில், இன்று நண்பகல் 11 மணிக்கு மேல் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளையும் (அக்.10), திங்கட்கிழமையும் (அக்.14) கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் உயிரிழந்த மாணவன் சுந்தருக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். கடந்த வாரம் நடைபெற்ற மோதலில் மாணவர் சுந்தர் படுகாயம் அடைந்து இன்று காலை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

News October 9, 2024

பண்ணை பசுமை கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.49

image

வெங்காயம், தக்காளி விலை கடும் உயர்வைத் தொடர்ந்து, பண்ணை பசுமை கடைகளில் பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு விற்பனையைத் தொடங்கியுள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.49க்கும், பெரிய வெங்காயம் 1 கிலோ ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் நேற்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

News October 9, 2024

சென்னையில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு, கேரளம் மற்றும் வடதமிழக பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பணிக்கு செல்வோர் மறக்காமல் குடை அல்லதுனு ரெயின் கோர்ட் எடுத்துச் செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க

News October 9, 2024

உடனடி அபராதம் விதிக்க சாதனங்கள் ரெடி

image

சென்னை மாநகராட்சியில் விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உடனடி அபராதம் விதிப்பதற்காக, ‘ஸ்பாட் ஃபைன்ஸ்’ விண்ணப்ப தொகுதி சோதனை இன்று முடிவுக்கு வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, 500க்கும் மேற்பட்ட சாதனங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். இதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி கடுமையான அமலாக்க இயக்கத்திற்கு செல்லும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

News October 9, 2024

அனைத்து மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் பதிவு செய்ய வேண்டும்

image

சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள், வரும் நவம்பர் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். முறையாக பதிவு செய்யாத விடுதி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து ₹50,000 அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 9, 2024

மாநில கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

image

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சரமாரியாக தாக்கியதில், மாநிலக் கல்லூரி மாணவன் இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார். மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர்(19) கடந்த வெள்ளிக்கிழமை, கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்றபோது, பச்சயப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் சுந்தரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த சுந்தர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார்.

News October 9, 2024

1 கிலோ தக்காளி ரூ.120: பொதுமக்கள் அதிர்ச்சி

image

கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து கடுமையாக குறைந்ததையடுத்து, கடந்த ஜூலை மாதம் (1 கிலோ) தக்காளி ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து, விலை குறைந்து ரூ.30 வரை விற்பனையானது. கடந்த வாரம் வரை ரூ.35க்கு விற்கப்பட்ட நிலையில் கடந்த சில நாள்களாக படிப்படியாக உயா்ந்து நேற்று முதல் தரம் ரூ.90 வரையும், சில்லறை விற்பனையில் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.

News October 9, 2024

1000 இடங்களில் மருத்துவ முகாம்

image

சென்னையில் இன்று (அக்.8) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது. தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம். வரும் 15ஆம் தேதி 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. சென்னையில் 100 இடங்களிலும், மற்ற மாவட்டங்களில் 900 இடங்களிலும் நடத்தப்படுகிறது” என்றார்.

News October 8, 2024

அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு

image

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படவும், சாலைகளில் மழைநீர் தேங்கவும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக குடை எடுத்துச் செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!