Chennai

News October 10, 2024

அடுத்த மாதம் முதல் மீண்டும் பீச் – வேளச்சேரி ரயில்

image

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் தடத்தில், வரும் நவம்பர் மாதம் முதல் மீண்டும் ரயில் சேவையைத் தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. எழும்பூர் – கடற்கரை இடையே 4ஆவது ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக, 2023 ஆகஸ்ட் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை பறக்கும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் நவம்பர் மாதத்திற்குள் நிறைவுபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

News October 10, 2024

ரேஷன் கடைகளில் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர், கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் 348 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News October 10, 2024

கத்திப்பாரா பகுதியில் போக்குவரத்து மற்றும்

image

மெட்ரோ பணிகளுக்காக கத்திப்பாரா சந்திப்பில் அக்.11 முதல் 14 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கண்டோன்மென்ட் சாலையில் இடது புறம் திரும்பி சுந்தர் நகர் 7-வது குறுக்கு தெரு, தனகோட்டி ராஜா தெரு சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தெற்கு பகுதி சாலை வழியாக ஒலிம்பியா 100 அடி சாலை சந்திப்பு அடைந்து வாகனங்கள் கத்திப்பாராவை அடைய வலது புறமாகவும், வடபழனியை அடைய இடது புறமாகவும் தங்கள் இலக்குகளை நோக்கி செல்லலாம

News October 10, 2024

கத்தி பாரா பகுதியில் மெட்ரோ பணி – போக்குவரத்து மாற்றம்

image

சென்னை மெட்ரோ பணிகளுக்காக கத்திப்பாரா சந்திப்பில் அக்.11 முதல் 14 வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவை வழக்கம் போல் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பிலிருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலையில் நேராக செல்ல தடை.

News October 10, 2024

மெட்ரோ பணி காரணமாக போக்குவரத்து மாற்றம்

image

மெட்ரோ பணிக்காக கத்திப்பாரா சந்திப்பில் நாளை (அக்.11) முதல் 14ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. பூந்தமல்லி சாலையில் நேராக செல்ல தடை. அதற்கு பதிலாக, மவுண்ட் – பூந்தமல்லி சாலை பெல் இராணுவ சாலை சந்திப்பில் புதியதாக அமைந்துள்ள சாலை வழியாக, டிபென்ஸ் காலனி 1ஆவது அவென்யூவில் (வலதுபுறம் திரும்பி) வாகனங்கள் செயிண்ட் தாமஸ் மருத்துவமனை வழியாக பட்ரோடு சென்று அடையலாம். ஷேர் பண்ணுங்க

News October 10, 2024

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. ராயபுரம், திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, அடையாறு, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, தி.நகர், நுங்கம்பாக்கம், பெரம்பூர், சைதப்பேட்டை, அண்ணா சாலை, கோயம்பேடு, வடபழனி, மணலி உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. உங்க ஏரியாவில் மழையா?

News October 9, 2024

உதயம் தியேட்டரில் இதுதான் கடைசி படமா?

image

சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றான உதயம் திரையரங்கம் விரைவில் மூடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பல வெள்ளி விழா படங்களை கண்ட இந்த திரையரங்கில் கடைசி படம் வெளியாக இருக்கும் நிலையில், அதற்குப் பிறகு அது அடுக்குமாடி குடியிருப்பாக மாற இருக்கிறதாம். இந்நிலையில், உதயம் தியேட்டர் குறித்தான நினைவுகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

News October 9, 2024

மெரினா உயிரிழப்பு: மனித உரிமை ஆணையத்திற்கு புகார்

image

மெரினா கடற்கரையில் கடந்த 6ஆம் தேதி நடந்த இந்திய விமான படையின் விமான வாகச நிகழ்ச்சியில், 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் புகார் அளித்துள்ளார். 5 நபர்கள் உயிரிழந்தது தொடர்பாக, தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

News October 9, 2024

சென்னையில் 913 மோட்டார் பம்புகள் தயார்

image

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் 913 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் கூடுதல் மோட்டார்களை பொருத்தவும், படகுகளை அமைக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்தாண்டு, மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News October 9, 2024

கூடுதலான தாழ்த்தள பேருந்துகள் இயக்கம்

image

சென்னை பல்லவன் இல்ல பணிமனையில், ரூ.27.60 கோடி செலவில் போக்குவரத்து துறை சார்பில் கூடுதலாக 25 தாழ்தள பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதற்கு முன்பாக, தாழ்த்தர பேருந்து இயக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் பயனடைந்த நிலையில், தற்போது கூடுதலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாழ்தள பேருந்துகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

error: Content is protected !!