Chennai

News October 11, 2024

உதயம் திரையரங்கம் தொடர்ந்து இயங்கும்

image

சென்னை அசோக் நகரிலுள்ள உதயம் திரையரங்கம், நஷ்டத்தில் இயங்கி வருவதால் விரைவில் மூடப்பட உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ படம் தான் அந்தத் திரையரங்கில் ஓடும் கடைசிப் படமென செய்தி வெளியானது. இதுகுறித்து உதயம் திரையரங்கம் தரப்பில், “திரையரங்கம் விரைவில் மூடப்படுவது உறுதிதான். ஆனால் ‘வேட்டையன்’ கடைசிப் படமல்ல. இன்னும் சில படங்கள் இங்கு ஓடும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

News October 11, 2024

இன்று புறநகர் ரயில் சேவை அட்டவணை மாற்றம்

image

ஆயூத பூஜையையொட்டி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிபூண்டி, சூலூர்பேட்டை மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் இரயில்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.

News October 10, 2024

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்

image

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேரும் இன்று கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைதான சந்துரு, யுவராஜ், ஈஸ்வர், ஹரி புரசாத், கமலேஸ்வரன் ஆகிய 5 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News October 10, 2024

சென்னையில் அடுத்த ஒரு வாரத்துக்கு மிதமான மழை

image

சென்னையில் ஒரு வாரத்துக்கு மிதமான மழை பெய்யும் என்றும் வரும் 14ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவையால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

News October 10, 2024

2ஆவது நாளாக ரயில் டிக்கெட் முன்பதிவு (UTS) செயலி முடக்கம்

image

சென்னையில் 2ஆவது நாளாக ரயில் டிக்கெட் முன்பதிவு செயலியான UTS முடங்கியுள்ளதால் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். எக்ஸ்பிரஸ், புறநகர் ரயில் பயணிகள் UTS செயலியில் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்திய பின்னரும் சீசன் டிக்கெட் பெற முடியாமல் 2 நாட்களாக தவித்து வருகின்றனர். சென்னை மக்களே, நீங்கள் யாரேனும் இந்த சிக்கலை எதிர்கொண்டீர்களா? கமெண்ட் பண்ணுங்க!

News October 10, 2024

குப்பை கொட்டியவருக்கு ‘SPORT FINE’

image

பெருநகர சென்னை மாநகராட்சி சாலைகளில், குப்பைகளை வீசுபவர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கும் ‘SPOT FINE’ நடவடிக்கை இன்று முதல் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்று காலை கொத்வால் சாவடியில் உள்ள சாலையோரத்தில் குப்பையை வீசி சென்ற ஒருவருக்கு உடனடியாக ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 10, 2024

விமான கட்டணம் கிடுகிடுவென உயர்வு

image

பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் விமான நிலையத்தில் டிக்கெட்டுகளின் விலை 3 மடங்குகளுக்கு மேல் உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.12,026 முதல் ரூ.18,626 வரையும், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு ரூ.11,736 முதல் ரூ.13,626 வரையும், சென்னையிலிருந்து திருச்சி செல்ல ரூ.5,456 முதல் ரூ.6,907 வரையும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News October 10, 2024

விமானத்தில் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

image

டெல்லி – சென்னை விமானத்தில், நடுவானில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விமானம் சென்னையில் தரை இறங்கியதும் அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். முன் இருக்கையில் இருந்த பெண்ணிடம் ராஜேஷ் தவறாக நடந்து கொண்டதாகவும், முதலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் மீண்டும் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

News October 10, 2024

மெட்ரோ ரயில்: நாளை சனிக்கிழமை அட்டவணை

image

நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News October 10, 2024

அனைத்து நிறுவனங்களிலும் புகார் குழு அமைக்க வேண்டும்

image

சென்னை மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தடுக்க அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் உள்ள புகார் குழு ஏற்படுத்தப்பட வேண்டும் என் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!