Chennai

News November 2, 2024

ரசிகர் வேறு, கொள்கைக்காரர் வேறு: சீமான்

image

வளசரவாக்கத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ரசிகர் வேறு, போராளி, கொள்கைக்காரர் வேறு. இருவரையும் ஒப்பிடக் கூடாது. கூட்டத்தை வைத்து கணக்கிடக் கூடாது. பிரபலமான இன்னொரு திரைக் கலைஞரை வைத்து கூப்பிட்டாலும், கூட்டம் கூடும். மதுரையில் விஜயகாந்த்துக்கு கூடாத கூட்டம் த.வெ.க. மாநாட்டில் கூடிவிட்டதா? என கேள்வி எழுப்பினார்.

News November 2, 2024

சென்னையில் ஆவின் பால் விற்பனை சரிவு

image

தீபாவளி பண்டிகையையொட்டி, தொடர் விடுமுறை விடப்பட்டதால் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்படவில்லை. சென்னையில் தினசரி ஆவின் பால் 14.50 லட்சம் லிட்டர் விற்பனையாகும். ஆனால், தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்றதால், கடந்த 2 நாட்களில் 2 லட்சம் லிட்டர்தான் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும், விற்பனை குறைந்துள்ளதாகவும் ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 2, 2024

சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், மதுரை, திருநெல்வேலி, கோவை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று (நவ.2) முதல் வரும் 4ஆம் தேதி வரையில், தமிழ்நாடு முழுவதும் தினந்தோறும் இயங்கக்கூடிய பேருந்துகள் மற்றும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் என 12,846 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

News November 2, 2024

வீட்டு வேலை செய்த சிறுமி மர்ம மரணம்: போலீஸ் விசாரணை

image

அமைந்தகரைப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நவாஸ். இவர், சொந்தமாக பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த 1 ஆண்டாக தஞ்சையைச் சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். நேற்று பாத்ரூம் சென்ற அச்சிறுமி, மர்மமான முறையில் இறந்து உள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 2, 2024

மதுக்கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை

image

சென்னையில், சமீபகாலமாக மதுக்கடைகளில் கூடுதல் விலை வைத்து விற்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பாட்டிலுக்கு ரூ.10 அல்லது அதற்கு மேல் கூடுதல் விலை வைத்து விற்கும் பணியாளர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மேற்பார்வையாளர் உட்பட அனைவரையும் ‘சஸ்பெண்ட்’ செய்யுமாறு மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

News November 2, 2024

சென்னையில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்புடன் வெளியே செல்லுங்கள். குடை, ரெயின் கோர்ட் கொண்டு செல்லுங்கள். வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுங்கள்.

News November 2, 2024

மழைக்காலத்தில் இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்

image

வெளியில் செல்வோர் கட்டாயம் குடை ரெயின்கோட், ஜர்கின் போன்றவற்றை கொண்டு செல்லுங்கள். மெழுகுவர்த்தி, டார்ச் போன்றவற்றை வாங்கி வைக்கவும். வயதானவர்கள், உடல்நலம் பாதிப்பு அடைந்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான மருந்துகளை வாங்கி வைக்கவும். மழை பெய்யும்போது, ஜன்னல் கதவுளை மூடி வையுங்கள். மின் பழுது பார்க்க வேண்டாம். ஈரமான கைகளுடன் ஸ்விட்ச் போடாதீர்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்கவும்.

News November 2, 2024

மனநல மருத்துவ முகாம்: யூஸ் பண்ணிக்கோங்க

image

சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில், தினமும் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று செம்பியம், புளியந்தோப்பு, மாதவரம், அயனாவரம், தண்டையார்பேட்டை, லட்சுமிபுரம், சைதாப்பேட்டை, சத்தியமூர்த்தி நகர், கோட்டூர்புரம், கொண்டித்தோப்பு, முகலிவாக்கம், ECR, ஜாபர்கான்பேட்டை, MMDA, திருவான்மியூர், செனாய் நகர் போன்ற இடங்களில் மாலை 4.30 மணிக்கு மனநல மருத்துவ முகாம்கள் நடைபெறும். ஷேர் பண்ணுங்க

News November 2, 2024

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பேருந்துகள் இயக்கம்

image

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வாரும் 6ஆம் தேதி திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருச்செந்தூருக்கும், 7ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் பேருந்து இயக்கப்பட உள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 2, 2024

மூத்த குடிமக்களுக்கான உதவி எண்களை அறிவிப்பு

image

சென்னை பெருநகர மாநகராட்சியானது, 60 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடி மக்களுக்கான அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. அதன்படி, 14567 என்ற எண்ணுக்கு உதவி தேவைப்படுவோர் அழைக்கலாம் என்று பெருநகர சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், அவசர உதவி தேவைப்படுவோர் இந்த எண்ணை அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. மூத்த குடிமக்கள் இந்த எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம்.