India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே வீட்டின் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பூந்தமல்லி சக்தி நகர் குடியிருப்பு பகுதியில் குமார் என்பவர் வீட்டில் எதிர்பாராத விதமாக இன்று சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் வெடித்ததில் வீட்டிலிருந்த 2 சிறுவர்கள் உட்பட 5 பேரும் படுகாயம் அடைந்து பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே ரயில் விபத்து நடந்த இடத்தில் இருந்து 8 பெட்டிகள் ராட்சத கிரேன்கள் மூலம் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 11 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், தற்போது ராட்சத இயந்திரங்கள் மூலம் 8 பெட்டிகள் அகற்றப்பட்டன. மீதமுள்ள 3 ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு படை மற்றும் மீட்பு குழுவினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோயம்பேடு காய்கறி சந்தையில், கடந்த சில நாட்களாக தக்காளியை தவிர மற்ற காய்கறிகளின் விலை அதே விலையில் தொடர்கிறது. அதன்படி, இன்று விலையில் மாற்றம் இன்றி (1 கிலோ) தக்காளி ரூ.75, கேரட் ரூ.60, வெங்காயம் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.50, சின்ன வெங்காயம் ரூ.70, எலுமிச்சை ரூ.90, பீன்ஸ் ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் மழை பெய்தால் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 15ஆம் தேதி சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி 12 -20 செ. மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு மக்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுத்தனர். இதனால், சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகள் உடன் கூடுதலாக 1,028 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,120 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 1,62,240 பயணிகள் பயணித்துள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
ஹவாலா முறைகேடு வழக்கில், சமீபத்தில் அதிமுக பிரமுகர் ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டார். இதனால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக, கட்சியிலிருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டு கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வடசென்னை கிழக்கு மாவட்ட புரட்சித்தலைவி பேரவை துணைச் செயலாளர் ராமச்சந்திரன் என்பவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால், அக்கட்சியில் சலசலப்பு நிலவி வருகிறது.
மடிப்பாக்கம் குபேரன் நகரைச் சேர்ந்த ஆசிரியை வின்சி புளோரா என்பவர் வீட்டில், கடந்த இரு தினங்களுக்கு முன் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், வின்சிக்கு உடல் முழுவதும் 60% தீக்காயமும், சிலிண்டர் கொடுத்த மணிகண்டனுக்கு 45% தீக்காயமும் ஏற்பட்டது. இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட நிலையில், வின்சி சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். கவனமாக இருங்கள்!
செல்போனில் ரீல்ஸ் பார்த்தபடி அரசு பேருந்தை இயக்கிய தற்காலிக ஓட்டுநர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பதியிலிருந்து சென்னை மாதாவரம் நோக்கி வந்த பேருந்தை, ஓட்டுநர் ரீல்ஸ் பார்த்தபடி இயக்கியது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இதனால், பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் பேருந்தை இயக்கிய விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த தற்காலிக ஓட்டுநர் பார்த்திபன் என்பவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில், திருவொற்றியூர் பகுதியில் 33.6 மி.மீ., திரு.வி.க.நகர் பகுதியில் 30 மி.மீ., தேனாம்பேட்டை பகுதியில் 20.4 மி.மீ., அண்ணாநகர் பகுதியில் 20.1மி.மீ., கொளத்தூர் பகுதியில் 15 மி.மீ., கோடம்பாக்கம் பகுதியில் 15 மி.மீ., திருவொற்றியூர் பகுதியில் 14.8 மி.மீ., மணலி பகுதியில் 14.8 மி.மீ., மழை அளவு பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களில் மட்டும் அரசு பேருந்து, ஆம்னி பேருந்து, ரயில்கள், சொந்த வாகனங்கள் என சென்னையில் இருந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக பயணம் மேற்கொண்டுள்ளனர். வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கடந்த 2 நாட்களாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை பயணிக்க 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.