India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டிட வளாகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள “1913 கட்டுப்பாட்டு மையத்தில்” மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை நேற்று அமைச்சர் நேரு நேரில் ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களுக்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு நாளை (15/10/2024) வடகிழக்கு பருவ கனமழையின் முன் எச்சரிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் சென்னை பல்கலைக்கழகமும் இந்த அறிவிப்பை வெளியிட்டது. நாளைக்குப் பதிலாக நவ.9ஆம் தேதி பல்கலைக்கழகம் செயல்படும் என நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
சைதாப்பேட்டை, கிண்டி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, பூந்தமல்லி, பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் சாலையில் நடுவே வைக்கப்பட்டுள்ள பேரிக்காடுகள் முழுவதும் சாய்ந்து காணப்படுகிறது. தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.
சென்னை முழுவதும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், சென்னையில் 180 இடங்கள் வெள்ள அபாய பகுதிகளாகத் தரம் பிரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இப்பகுதிகளுக்கென கூடுதலாக மீட்புப் படையினர் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி வனத்துறை, மழையின்போது வீட்டிற்குள் நுழையும் பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் ஆகியவற்றைப் பிடிக்க அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. பாம்புகளை பிடிக்க – 044 22200335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால் உடனடியாக வனத்துறையினர் உங்கள் பகுதிக்கு வந்து பாம்புகளை பிடித்து செல்வார்கள் என்று தெரிவித்துள்ளது.
அக்டோபர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சென்ட்ரல் மெட்ரோ – பரங்கிமலை மெட்ரோ வழித்தடத்தில் 5 நிமிட இடைவெளியிலும், விம்கோ நகர் பணிமனை – விமான நிலையம் வழித்தடத்தில் 6 நிமிட இடைவெளியிலும், வண்ணார்பேட்டை – ஆலந்தூர் மெட்ரோ வழித்தடத்தில் 3 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர், முருகானந்தம் “செம்பரம்பாக்கம் ஏரி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பிரச்சனைக்குரிய பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு பணியினர் களம் இறக்கப்பட்டுள்ளனர். தனியார் துறை ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியவும்” என்று தெரிவித்தார்.
சென்னையில் நாளை அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சாலையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற, ஒரு மண்டலத்திற்கு 3 ராட்சத பம்ப்செட் பொருத்திய டிராக்டர்கள் தயார் நிலையில் உள்ளது. மொத்தம் 57 பம்ப்செட் பொருத்தப்பட்ட டிராக்டர்கள், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து சென்னை மாநகராட்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பால், பால் பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கையை ஆவின் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஆவடி, அண்ணாசாலை, தி.நகர், பூவிருந்தவல்லி, மாதவரம், விருகம்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 9 பாலகத்தில் தலா 1000 கிலோ என்ற அடிப்படையில் 9,000 கிலோ பால்பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை அடுத்து, சென்னையில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள 50 இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். ஆயுதப்படையில் உள்ள பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 300க்கும் மேற்பட்ட காவலர்கள் தயார் நிலையில் உள்ளதாக் கூறியுள்ள அருண், காவல் நிலையங்கள் வாரியாக தனியாக கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.