India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனமழை எதிரொலியாக, இன்று காய்கறிகள் விலை சென்னையில் வெகுவாக அதிகரித்துள்ளது. தக்காளி விலை ஒரே நாளில் ரூ.40 அதிகரித்துள்ளது. கோயம்பேடு மொத்த சந்தையில் நேற்று ரூ.50 – ரூ.80 வரை தக்காளி விற்றது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் 40 ரூபாய் உயர்ந்து, ரூ.80 – ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெங்காயம் ரூ.40 – ரூ.60க்கும், கேரட் ரூ.60 – ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
சென்னையில் அடுத்த 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதையடுத்து, “வடகிழக்கு பருவமழையை சமாளிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. சென்னையில் மழை முன்னேற்பாடுகள் துரிதமாக நடைபெறுகின்றன. அத்தியாவசிய பொருட்களை மக்கள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். அரசு துறைகள் அனைத்தும் மழை பாதிப்பை சமாளிக்க ஆயத்தமாக உள்ளன” எனத் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், வடபழனி, கிண்டி, தி.நகர், கோயம்பேடு, அண்ணா நகர், பெரம்பூர், ராயபுரம், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, அம்பத்தூர், மணலி, மாதவரம், திருவல்லிக்கேணி, அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருங்கள். உங்க ஏரியாவில் மழையா?
சென்னையில் அடுத்த 2 நாட்கள் கனமழை பெய்ய உள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கையாக வேளச்சேரி, மடிப்பாக்கம் பாலங்களுக்கு மேல், அப்பகுதிவாசிகள் தங்களது கார்களை நிறுத்தி வைத்தனர். இந்த கார்களுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், “அவசரக் காலத்தில் கார்களை மேம்பாலத்தில் பார்க் செய்தவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம்” என காவல்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் அவசரம் காட்டுகின்றனர். தி.நகர் மற்றும் கோயம்பேடு சந்தைகளில் காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாகக் குவிந்தனர். அடுத்த சில நாட்கள் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்படலாம் என்பதை முன்கூட்டியே உணர்ந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர்.
திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் வழியில் பக்கிங்காம் கால்வாய் மேல் 52 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. மேம்பாலத்தில் காங்கிரட்டுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு சேதம் அடைந்தது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இதனை உடனடியாக சரிசெய்த அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டிட வளாகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள “1913 கட்டுப்பாட்டு மையத்தில்” மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை நேற்று அமைச்சர் நேரு நேரில் ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களுக்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு நாளை (15/10/2024) வடகிழக்கு பருவ கனமழையின் முன் எச்சரிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் சென்னை பல்கலைக்கழகமும் இந்த அறிவிப்பை வெளியிட்டது. நாளைக்குப் பதிலாக நவ.9ஆம் தேதி பல்கலைக்கழகம் செயல்படும் என நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
சைதாப்பேட்டை, கிண்டி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, பூந்தமல்லி, பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் சாலையில் நடுவே வைக்கப்பட்டுள்ள பேரிக்காடுகள் முழுவதும் சாய்ந்து காணப்படுகிறது. தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.
சென்னை முழுவதும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், சென்னையில் 180 இடங்கள் வெள்ள அபாய பகுதிகளாகத் தரம் பிரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இப்பகுதிகளுக்கென கூடுதலாக மீட்புப் படையினர் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.