India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தற்போது பெய்த கனமழையால், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக, திருவொற்றியூர் மண்டலம் தாமரைக்குளம், மணலி மண்டலம் எலந்தனுார் குளம், பர்மா நகர் குளம், கன்னியம்மன்பேட்டை குளம், காமராஜபுரம் குளம், வடபெரும்பாக்கம் குளம், விநாயகபுரம் மயானபூமி குளம், தீயம்பாக்கம் குளம், காந்திநகர் குளம் உட்பட 59 குளங்களில் மழைநீர் நிரம்பியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (பகல் 1 மணி வரை) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலிருந்து வெளியே செல்வோர் குடை எடுத்துச் செல்லவும். ஷேர் பண்ணுங்க
சென்னையில் கடந்த சில நாட்களாக காலை, இரவு என மாறி மாறி மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சைதாப்பேட்டை, தி.நகர் பகுதிகளில் லேசான மழை இருந்தது. அதிகாலை 4 மணியளவில், கிண்டி, ஆலந்தூர், வடபழனி பகுதிகளில் கனமழை பொழிந்தது. வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டியது. புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருமழிசை பகுதிகளில் மழை பெய்தது. உங்க ஏரியாவில்?
கிண்டியில் இன்று மாலை நடைபெற்ற தென் மாநில காவல்துறை இயக்குனர்கள் படைத்தலைவர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில எல்லைகளில் நவீன சாதனங்களுடன் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், போதைப் பொருள், மதுபானம் உள்ளிட்டவை கடத்தப்படுவதைத் தடுக்க நவீன சாதனங்களுடன் சோதனை சாவடிகள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.கதிரேசன் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் பெரும்பாலானோருக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. வழக்கமாக 5ஆம் தேதி வழங்கப்படும் ஓய்வூதியத்தை தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டும்.
மெரினா கடற்கரையில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம், 1.37 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டு, சமீபத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. நீச்சல் குளத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. இந்நிலையில், https://chennaicorporation.gov.in/gcc என்ற இணையதளத்தில் பொதுமக்கள் முன்பதிவு செய்வது, வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதை SHARE பண்ணுங்க.
கமிஷனர் அருண் சார்பில் மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அவர் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், “நான் மன்னிப்பு கேட்கவில்லை. என் விளக்கத்தை ஏற்று மாநில மனித உரிமைகள் கமிஷன், வழக்கிலிருந்து என்னை விடுவித்துள்ளது. அவ்வளவு தான்” என கமிஷனர் அருண் இன்று விளக்கம் அளித்துள்ளார். அவர் மன்னிப்பு கேட்டதாக தவறான தகவல் பரவியதால், அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கதீட்ரல் சாலையில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கு மழையின் காரணமாக கடந்த 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி (நேற்று) வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை (இன்று) முதல் பூங்கா வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது, நுழைவுச்சீட்டை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என தோட்டக்கலைத்துறை சார்பாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதான கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார், விஜயகுமார், திருவள்ளூரைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சில முக்கிய குற்றவாளிகளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சமீபத்தில், சென்னையில் கோயிலை திறக்க முயன்ற பூசாரி ஒருவர் மீது மின்சாரம் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், வீடுகளில் ஆர்.சி.டி.-ஐ பொருத்த தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. சிறிதளவு மின்கசிவு இருந்தாலும் மின்னோட்டத்தை ஆர்.சி.டி. நிறுத்திவிடும். மழைக்காலம் வரும் முன் உங்கள் வீட்டில் மின் திறனாளரைக் கொண்டு 30mA ஆர்.சி.டி. பொருத்துங்கள் என அறிவுரை வழங்கியுள்ளது.
Sorry, no posts matched your criteria.