Chennai

News October 20, 2024

சென்னை இரவு ரோந்து விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். புகைப்படத்தை “Double Click” செய்தால் பெயர் மற்றும் எண்ணை தெளிவாக காண முடியும். இதை SHARE செய்யவும்.

News October 20, 2024

விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்

image

சென்னை விமான நிலையத்தின் இயக்குனர் அலுவலகத்திற்கு இன்று பிற்பகல் வந்த வெடிகுண்டு மிரட்டல் இ-மெயிலால், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்பைஸ் ஜெட் தனியார் பயணிகள் விமானத்தின் அந்தமான், டெல்லி, மும்பை, கோவா, புனே ஆகிய 5 விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாக மிரட்டல் வந்தது. பின்னர் தீவிர சோதனைக்கு பிறகு, அது பொய்யான மிரட்டல் என்பது தெரியவந்தது.

News October 20, 2024

சென்னையில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

சென்னையில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிழவுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 20, 2024

சென்னை கலெக்டர் ஆபீஸ் அருகே ஆர்ப்பாட்டம்

image

சென்னை பாரிமுனையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், தமிழ்நாடு அரசு ஆர்.சி.எச் தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்.சி.எச் தூய்மை பணியாளர்களை பணி நியமனம் செய்யவும், ஊதிய உயர்வு வழங்கவும் கோரி  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பினர்.

News October 20, 2024

தீபாவளியை முன்னிட்டு கூடுதல் பேருந்து இயக்க முடிவு

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வார இறுதி நாட்களான இன்று (அக்.20), வரும் 26 மற்றும் 27 ஆகிய 3 நாட்களுக்கு பயணிகள் வசதிக்காக தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை (எம்.சி.ரோடு) ஆகிய இடங்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

News October 20, 2024

242 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் 2024-25ஆம் ஆண்டுக்கான அறிவிப்பின்படி, 3,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், ஏற்கனவே மற்ற போக்குவரத்து கழகங்களில் 162 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 80 புதிய சாதாரண BS-VI பேருந்துகளையும் சேர்த்து 242 புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

News October 20, 2024

சென்னையில் 177% கூடுதல் மழைப்பதிவு

image

சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 177% கூடுதலாக அதிக அளவில் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று காலை வரை இயல்பாக 122.4 மில்லி மீட்டர் மழைக்கு பதில் 338.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News October 20, 2024

59 குளங்கள் நிரம்பி உள்ளதாக மாநகராட்சி தகவல்

image

தற்போது பெய்த கனமழையால், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக, திருவொற்றியூர் மண்டலம் தாமரைக்குளம், மணலி மண்டலம் எலந்தனுார் குளம், பர்மா நகர் குளம், கன்னியம்மன்பேட்டை குளம், காமராஜபுரம் குளம், வடபெரும்பாக்கம் குளம், விநாயகபுரம் மயானபூமி குளம், தீயம்பாக்கம் குளம், காந்திநகர் குளம் உட்பட 59 குளங்களில் மழைநீர் நிரம்பியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News October 20, 2024

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (பகல் 1 மணி வரை) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலிருந்து வெளியே செல்வோர் குடை எடுத்துச் செல்லவும். ஷேர் பண்ணுங்க

News October 20, 2024

சென்னையில் அதிகாலை கொட்டிய கனமழை

image

சென்னையில் கடந்த சில நாட்களாக காலை, இரவு என மாறி மாறி மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சைதாப்பேட்டை, தி.நகர் பகுதிகளில் லேசான மழை இருந்தது. அதிகாலை 4 மணியளவில், கிண்டி, ஆலந்தூர், வடபழனி பகுதிகளில் கனமழை பொழிந்தது. வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டியது. புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருமழிசை பகுதிகளில் மழை பெய்தது. உங்க ஏரியாவில்?

error: Content is protected !!