Chennai

News October 22, 2024

64 சிசிடிவி கேமராக்கள் கூடுதலாக பொருத்தம்

image

சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “குற்றவாளிகளை கண்டுபிடிக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தி.நகர் உட்பட்ட பல பகுதியில் 64 சிசிடிவி கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசல் தடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

News October 22, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் இன்று ஆஜர்

image

ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டாஸில் அடைக்கப்பட்டுள்ள 26 பேர், அட்வைசரி போர்டில் இன்று ஆஜராக உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவர்கள், இன்று பிற்பகல் குண்டர் சட்ட அறிவுரை கழகத்தில் ஆஜராக்கப்படுகின்றனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 26 பேரையும் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் ஆஜராக்கப்பட உள்ளனர்.

News October 22, 2024

பொதுமக்கள் அவசர உதவிக்கு இந்த எண்களை அணுகலாம்

image

தியாகராய நகர், புரசைவாக்கம், என்.எல்.சி போஸ் ரோடு ஆகிய இடங்களில் காவல்துறையினர் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர உதவிக்கு தியாகராய நகர் (7358543058), புரசைவாக்கம் (7824867234), என்எல்சி போஸ் ரோடு ( 8122360906) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 21, 2024

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News October 21, 2024

சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணி

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 18,000 காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் பாதுகாப்பு பணிக்கு சென்னை பெருநகர காவல் ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க குவிந்து வருவதன் காரணமாக சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News October 21, 2024

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அபராதம்

image

தீபாவளியையொட்டி 28ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு, தினசரி பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதுபோல நவ.2 ஆம் தேதியிலிருந்து 4ஆம் தேதிவரை 12,606 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் 18004256151, 044-26280445 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

News October 21, 2024

போலீசாரிடம் தகராறு செய்த ஜோடி கைது

image

பட்டினம்பாக்கம் லூப் சாலையில் நேற்றிரவு, ஒரு ஜோடி போலீசாரை ஒருமையில் பேசி, தகாத வார்த்தையால் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரைலானது. இந்நிலையில், அந்த ஜோடியின் கார் பதிவெண்ணை வைத்து, வேளச்சேரியில் பதுங்கி இருந்த அவர்களை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தினர். தற்போது அந்த ஜோடி மீது 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

News October 21, 2024

சென்னைக்கு பாதிப்பு இருக்குமா?

image

வங்ககடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று காலை உருவானது. இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் டானா புயலாக வலுப்பெறும் இந்த தாழ்வு பகுதி அக்.24ஆம் தேதி கரையை கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை நேரடியாக பாதிக்காது எனக் கூறியுள்ள வானிலை மையம், சென்னைக்கு லேசான மழை இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

News October 21, 2024

சென்னையில் பரவலாக மழை

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், தி.நகர், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததது. வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில் மழை பெய்து வருகிறது.

News October 21, 2024

எம்.பி. கலாநிதி வீராசாமி மத்திய அமைச்சருக்கு கடிதம்

image

வட சென்னை எம்.பி கலாநிதி வீராசாமி, ரயில்வே மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்-க்கு ரயில்வே தளவாடங்கள் பராமரிப்பு, சிக்னல் போன்ற உபகரணங்களை சரியான முறையில் பராமரித்தல், போதுமான நிதி ஒதுக்குதல், காலி பணியிடங்களை உடனே நிரப்புதல் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். இரயில் சேவைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதினார்.

error: Content is protected !!