India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, 5 லட்சம் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வழக்கமான பேருந்து, சிறப்புப் பேருந்து என மொத்தம் 11,176 பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 28 பேரும் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர். வழக்கில் தொடர்புடைய 30 பேர் மீது, எழும்பூர் நீதிமன்றத்தில் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்திருந்தனர். தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நகலை இன்று கைது செய்யப்பட்டவர்களிடம் வழங்க உள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின், 234 சட்டப்பேரவைத் தொகுதி திமுக பார்வையாளர்களுடன் இன்று (அக்.28) ஆலோசனை நடத்துகிறார். தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தேர்தல் பணிகள் குறித்தும், சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்றும், அடுத்து செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார். இதில், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் நவ.1ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விக்கிரவண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டில், சென்னையைச் சேர்ந்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த சார்லஸ் அஜித் ரசிகர் ஆகும். விஜய்யை பார்க்க சென்றதாகவும், அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தகவும் கூறப்படுகிறது. இறுதிச்சடங்கிற்கு கூட பணம் இல்லாமல் தவிப்பதாக அவரது தாயார் கண்ணீருடன் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்று கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் புத்தாடை, நகை, பட்டாசு வாங்க வணிக வீதிகளில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் குவிந்தனர். குறிப்பாக தியாகராயநகர் ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், மயிலாப்பூர், பாரிமுனை, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு வணிக வீதிகளில் உள்ள கடைகளில் மக்கள் அதிகளவில் திரண்டிருந்தனர்.
சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள ரிப்பன் மாளிகையில், மாநகர மேயர் பிரியா ராஜன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டால் பொதுமக்கள் உடனடியாக கட்டணமில்லா தேசிய உதவி எண் 14420-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.
வரும் டிச.25ஆம் தேதி வரை மாஞ்சா நூல் தயாரித்தல், விற்றல் உள்ளிட்டவைக்கும், ட்ரோன்கள் பறக்கவும் தடை விதித்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மாஞ்சா நூல் பட்டத்தால் பலரும் உயிரிழக்கும் சூழல் உருவானது. மேலும், பலர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் தயாரிக்கவும், பறக்க விடவும், விற்பனை செய்யவும், சேமித்து வைக்கவும் தடை விதித்து காவல் துறை உத்தரவு பிறப்பித்தது. ஷேர் பண்ணுங்க
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
அடுத்த 2 நாட்களுக்கு பகல் வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.
டானா சூறாவளி காரணமாக காற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றத்தால் பகல் நேர வெப்பநிலை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். புயல் காற்றின் திசையை வடகிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மாற்றியது, புயலைச் சுற்றி காற்று குவிந்ததால், சென்னை பகல் வெப்பநிலை அதிகரித்து வறண்ட வானிலை காணப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.