India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (31-ந்தேதி) பொதுவிடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் – சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும்.
சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டிகள் வரும் 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை, அண்ணா நூற்றாண்டு நூலக உள்ளரங்கில் நடக்க உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் அவர், “1000 பேர் அமர்ந்து பார்க்கும்படி உள்ளரங்கம் உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஒரு டிக்கெட்டுக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் தீயணைப்பு வீரர்கள் தீபாவளி தீ விபத்தை தடுப்பதற்காக தயார் நிலையில் இருக்கிறார்கள். சென்னையில் உள்ள 43 தீயணைப்பு நிலையங்களிலும் 800 பேர் பணியாற்றி வரும் நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து 21 தீயணைப்பு வண்டிகளில் 300 பேர் வந்துள்ளனர். இவர்களோடு சேர்ந்து மொத்தம் 1100 தீயணைப்பு வீரர்கள் 70 இடங்களில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், செயல்பட்டு வரும் 108 அவசரகால மேலாண்மை மையத்தில் (108 Emergency Response Center) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (30.10.2024) ஆய்வு மேற்கொண்டார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு முன் ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்தார்.
சென்னையில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளாதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, மதியம் 12-1 மணியளவில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நேற்று மாலையும் திடீரென மழை வெளுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டுத் திடல்கள் தனியாருக்கு ஒப்படைக்கப்படும் என்றும், அதன் கட்டணம் அதிகரிக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அது விளையாட்டுகளின் வீழ்ச்சிக்குத் தான் வழிவகுக்கும். விளையாட்டுத் திடல்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், சென்னையில் வசிக்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். சென்னையில் வசித்து வரும் மக்களுக்கு உதவும் வகையில், நாளை (அக்.31)ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் ரயில் சேவைகள் இயங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த அறிவிப்பை ஏற்று தங்கள் பயணத்தை அமைத்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறி தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளர். சென்னை அடுத்த கோவளம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் பச்சை இதனை நிகழ்த்தி காட்டியுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த இவர், தற்போது இந்த புதிய சாதனையை படைத்துள்ளார். அவருக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். உங்களுக்கும் இதுபோல் மலையேற பிடிக்குமா என்று கமெண்டில் சொல்லுங்க.
முத்துராமலிங்க தேவரின் 117ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அமைச்சர் ரகுபதி, அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத் துறை சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆகியோர் முத்துராமலிங்கத் தேவரின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
Sorry, no posts matched your criteria.