Chennai

News October 31, 2024

பாதிப்பு இல்லாத தீபாவளியை கொண்டாட அறிவுறுத்தல்

image

சென்னையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயம் ஏற்பட்ட 4 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டனர். 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 3 பேர் வீடு திரும்பினர். 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயட்டை, ராஜிவ் காந்தி, ஓமந்தூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை” என்றார்.

News October 31, 2024

பட்டாசு விபத்து: மருத்துவ உதவி எண்கள் வெளியீடு

image

சென்னையில், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில், தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில், அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும், தீக்காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான மருதத்துவ உதவிகள் தயார் நிலையில் உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த மருத்துவ உதவிகளை பெற 9444340496, 8754448477 என்ற எண்களிலோ அல்லது 104 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 31, 2024

சென்னை துறைமுக ஆணையத்தில் வேலை

image

சென்னை துறைமுக ஆணையத்தில் காலியாக உள்ள 16 Executive Engineer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிஇ., பி.டெக்., எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்சில் இன்ஜினியரிங் முடித்தவர்கள், “செயலாளர், சென்னை துறைமுக ஆணையம், ராஜாஜி சாலை, சென்னை – 600 001” என்ற முகவரிக்கு நவ.25க்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம். கட்டணம் இல்லை. சம்பளம்: Rs.50,000 – 1,60,000 ஆகும். <>ஷேர் பண்ணுங்க<<>>

News October 31, 2024

மெட்ரோ ரயிலில் 20% கட்டணத் தள்ளுபடி

image

தீபாவளியை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ் அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ் அப் டிக்கெட் (83000 86000) மூலம் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

News October 31, 2024

சென்னையில் மோசமான காற்று மாசுபாடு

image

தீபாவளி பண்டிகை சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு. சென்னையில் 3 இடங்களில் காற்றின் தரக்குறியீடு மோசமடைந்துள்ளது எனவும் சென்னையில் எந்த ஒரு பகுதியிலும் காற்றின் தரம் நன்றாக இல்லை எனவும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தொடர்ந்து காசு மாசுபட்டு வருதாகவும் வாரியம் தெரிவித்துள்ளது .

News October 31, 2024

கடந்த ஆண்டை விட அதிகமாக முன்பதிவு – அமைச்சர்

image

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்தார். “அரசுப் பேருந்துகளில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 40 ஆயிரம் பேர் அதிகமாக முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு நடப்பாண்டு அரசுப் பேருந்துகளில் 1.50 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். மேலும் பொதுமக்களுக்கு, அரசு பேருந்து பயணத்தின் போது எந்த பிரச்சனையும் இல்லை” என தெரிவித்தார்.

News October 31, 2024

சென்னை மக்களே கவனமாக கொண்டாடுங்க

image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட சென்னை மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்.

News October 31, 2024

ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கம்

image

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (31-ந்தேதி) பொதுவிடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் – சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும்.

News October 31, 2024

சென்னையில் கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டிகள்

image

சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டிகள் வரும் 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை, அண்ணா நூற்றாண்டு நூலக உள்ளரங்கில் நடக்க உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் அவர், “1000 பேர் அமர்ந்து பார்க்கும்படி உள்ளரங்கம் உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஒரு டிக்கெட்டுக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

News October 31, 2024

சென்னையில் 70 இடங்களில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலை

image

சென்னையில் தீயணைப்பு வீரர்கள் தீபாவளி தீ விபத்தை தடுப்பதற்காக தயார் நிலையில் இருக்கிறார்கள். சென்னையில் உள்ள 43 தீயணைப்பு நிலையங்களிலும் 800 பேர் பணியாற்றி வரும் நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து 21 தீயணைப்பு வண்டிகளில் 300 பேர் வந்துள்ளனர். இவர்களோடு சேர்ந்து மொத்தம் 1100 தீயணைப்பு வீரர்கள் 70 இடங்களில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

error: Content is protected !!