India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், மதுரை, திருநெல்வேலி, கோவை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று (நவ.2) முதல் வரும் 4ஆம் தேதி வரையில், தமிழ்நாடு முழுவதும் தினந்தோறும் இயங்கக்கூடிய பேருந்துகள் மற்றும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் என 12,846 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
அமைந்தகரைப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நவாஸ். இவர், சொந்தமாக பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த 1 ஆண்டாக தஞ்சையைச் சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். நேற்று பாத்ரூம் சென்ற அச்சிறுமி, மர்மமான முறையில் இறந்து உள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில், சமீபகாலமாக மதுக்கடைகளில் கூடுதல் விலை வைத்து விற்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பாட்டிலுக்கு ரூ.10 அல்லது அதற்கு மேல் கூடுதல் விலை வைத்து விற்கும் பணியாளர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மேற்பார்வையாளர் உட்பட அனைவரையும் ‘சஸ்பெண்ட்’ செய்யுமாறு மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்புடன் வெளியே செல்லுங்கள். குடை, ரெயின் கோர்ட் கொண்டு செல்லுங்கள். வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுங்கள்.
வெளியில் செல்வோர் கட்டாயம் குடை ரெயின்கோட், ஜர்கின் போன்றவற்றை கொண்டு செல்லுங்கள். மெழுகுவர்த்தி, டார்ச் போன்றவற்றை வாங்கி வைக்கவும். வயதானவர்கள், உடல்நலம் பாதிப்பு அடைந்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான மருந்துகளை வாங்கி வைக்கவும். மழை பெய்யும்போது, ஜன்னல் கதவுளை மூடி வையுங்கள். மின் பழுது பார்க்க வேண்டாம். ஈரமான கைகளுடன் ஸ்விட்ச் போடாதீர்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்கவும்.
சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில், தினமும் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று செம்பியம், புளியந்தோப்பு, மாதவரம், அயனாவரம், தண்டையார்பேட்டை, லட்சுமிபுரம், சைதாப்பேட்டை, சத்தியமூர்த்தி நகர், கோட்டூர்புரம், கொண்டித்தோப்பு, முகலிவாக்கம், ECR, ஜாபர்கான்பேட்டை, MMDA, திருவான்மியூர், செனாய் நகர் போன்ற இடங்களில் மாலை 4.30 மணிக்கு மனநல மருத்துவ முகாம்கள் நடைபெறும். ஷேர் பண்ணுங்க
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வாரும் 6ஆம் தேதி திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருச்செந்தூருக்கும், 7ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் பேருந்து இயக்கப்பட உள்ளது. ஷேர் பண்ணுங்க
சென்னை பெருநகர மாநகராட்சியானது, 60 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடி மக்களுக்கான அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. அதன்படி, 14567 என்ற எண்ணுக்கு உதவி தேவைப்படுவோர் அழைக்கலாம் என்று பெருநகர சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், அவசர உதவி தேவைப்படுவோர் இந்த எண்ணை அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. மூத்த குடிமக்கள் இந்த எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தென்னக ரயில்வே பல்வேறு சிறப்பு சேவைகளை செய்து வருகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படக்கூடிய புறநகர் ரயில் சேவைகள் இன்று (நவ.2) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெனக்க ரயில்வே தெரிவித்துள்ளது. சிரமத்தை தவிர்த்திடுங்கள். ஷேர் பண்ணுங்க
ஆர்.ஏ.புரம் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் லித்தீஷ் (21). இவர், நேற்று முன்தினம் தனது நண்பர்கள் உடன் OMR சாலையில் தீபாவளி கொண்டாடிவிட்டு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, விஜயநகர் பேருந்து நிறுத்தம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்புச் சுவரில் மோதியது. இதில் லித்தீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது தந்தை சின்னத்திரை நடிகர் கார்த்திக் ஆகும்.
Sorry, no posts matched your criteria.