Chennai

News November 7, 2024

சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு

image

சென்னையில் இன்று (நவ.7) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால், காலை 9 மணி – மதியம் 2 மணி வரை வில்லிவாக்கம், அண்ணா சாலை பகுதி, பஜார் சாலை, ஆலந்தூர் சாலை, சாஸ்திரி நகர், சிஐடி நகர், 70 அடி சாலை, பழைய மாம்பலம் ரோடு, கோடம்பாக்கம், சேத்துப்பட்டு, திடீர் நகர், சின்னமலை, அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், மாடம்பாக்கம், சோழிங்கநல்லூர், எழும்பூர் உள்பட பல இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 7, 2024

பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்

image

நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் 9ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். ஷேர் பண்ணுங்க

News November 7, 2024

சென்னையில் ரூ.10 கோடி மோசடி செய்த 2 பேர் கைது

image

சென்னையில் ஆன்லைன் பங்கு வர்த்தக முதலீட்டில் ரூ.10 கோடி மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மோசடியில் ஈடுபட்ட பொழிச்சலூரைச் சேர்ந்த ராஜேஸ் ராம் (36), கே.கே.நகரைச் சேர்ந்த சீனிவாசன் (43) ஆகியோர் கைதாகினர். மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 3 செல்போன்கள், 2 ஆதார் கார்டுகள், பான் கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

News November 7, 2024

ஆன்லைன் மூலம் இழந்த ரூ.31 லட்சம் ஒப்படைப்பு!

image

ஆன்லைன் பங்கு வர்த்தகம் மற்றும் ஆன்லைன் பகுதிநேர வேலை மூலமாக பணத்தை இழந்த கார்த்திக் ரூ.6,00,000/-, அஸ்வத் ரூ.5,88,130/-, சுபத்ரா ரூ.30,992/-, ஸ்ரீவத்சன் ரூ.2,00,000/, விக்ரம் ரூ.3,83,100/-, அசோக்குமார் ரூ.6,50,000/-, ஆஷிஷ்குமார் ரூ.2,68,949/- ஆகியோர் உட்பட பலர், நேற்று(6.11.2024) மொத்தம் ரூ.31,67,366க்கான சான்றிதழ்களை, ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கரிடம் பெற்றுக்கொண்டனர்.

News November 7, 2024

பெண்ணை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்த மருத்துவர் கைது

image

அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் கௌதமுக்கும், அதே மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.‌ இந்நிலையில் அந்த பெண் கர்ப்பமானார். இதையடுத்து அந்த பெண் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டபோது, கௌதம், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், அமைந்தகரை போலீசார் இன்று கௌதமை கைது செய்தனர்.

News November 6, 2024

ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

ஸ்டான்லி அரசு மருத்துவ மருத்துவக் நிர்வாகத்தின் இ-மெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, ராயபுரம் போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டார். சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வந்த இ-மெயில் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 6, 2024

மருத்துவமனையில் பணம் கையாடல் செய்த பெண் கைது

image

சென்னை பிரபல தனியார் மருத்துவமனையில், நோயாளிகள் செலுத்திய கட்டணத்தை, தனது வங்கி கணக்குக்கு மாற்றி ரூ.52 லட்சம் கையாடல் செய்த பெண் கணக்காளரை, போலீசார் கைது செய்தனர். மேலும், நோயாளிகள் செலுத்திய கட்டணத்தை, அந்த பெண் எப்படி தன் கணக்கிற்கு மாற்றினார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 6, 2024

நாளை மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

image

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் நாளை (நவ.7) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஒருசில இடங்களில் மழை பெய்ய உள்ளது.

News November 6, 2024

பிரபல A+ ரவுடி சென்னையில் கைது

image

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வெள்ளை பிரகாஷை கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர். எருக்கஞ்சேரியைச் சேர்ந்த பிரபல A+ ரவுடி வெள்ளை பிரகாஷ். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா கடத்தல், வெடிகுண்டு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 1 வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் ஆஜராக நேற்று காலை சென்னை வந்தவரை பாரிமுனை பகுதியில் கைது செய்தனர்.

News November 6, 2024

ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு முகாம்

image

ஒன்றிய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம், ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுடைய உயிர் வாழ் சான்றிதழ் வழங்குவதற்காக பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள பொது அஞ்சலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும், டிஜிட்டல் முறையில் தபால்காரர்கள் மூலம் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று முகம், கைவிரல் ரேகை ஆகியவை எடுத்து சான்று பெறப்படுகிறது.

error: Content is protected !!