Chennai

News November 8, 2024

புதிய தமிழகம் கட்சி பேரணி: 686 பேர் மீது வழக்குப்பதிவு

image

அருந்ததியர் உள் இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்வது உட்பட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி சார்பில் தடையை மீறி சென்னையில் பேரணி நடைபெற்றது. இதையடுத்து, கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்ட நிலையில், பேரணியில் ஈடுபட்ட 686 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

News November 8, 2024

வடகிழக்கு பருவமழை 7% கூடுதலாக பெய்துள்ளது

image

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை, இன்று காலை வரை இயல்பை விட 7% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று (நவ.8) காலை வரை 235.7 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், 252.5 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 3% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

News November 8, 2024

டாஸ்மாக் கடைகளில் 2 வாரங்களில் பில் வழங்க திட்டம்

image

சென்னையை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளில் இன்னும் 2 வாரங்களில் பில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. டாஸ்மாக் கடைகளை நவீனமயமாக்கும் முயற்சிகளை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்து வருகிறது. குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு ரசீது வழங்குதல், மதுபாட்டில்களில் பார்கோடு அச்சிட்டு அதன் மூலம் தொடர்ச்சியாக கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கை நிர்வாகம் மேற்கொள்ள உள்ளன.

News November 8, 2024

சென்னையில் இடி மின்னலுடன் மழை பெய்யும்

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசையொட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசையொட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 8, 2024

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நிக்கி கல்ராணி பங்கேற்பு

image

தமிழ்நாட்டின் வனவிலங்குகளைப் பாதுகாப்பதிலும், அதற்கான சமூக ஆதரவின் அவசரத் தேவை குறித்தும் நேற்று மாலை வண்டலூர் பூங்காவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகை நிக்கி கல்ராணி, வண்டலூர் மிருகக்காட்சி சாலையின் இயக்குநர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா, அதிகாரிகள், பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்களுடன் ‘Good Deeds Club’ உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

News November 8, 2024

சென்னையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு 

image

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (நவ.8) சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 8, 2024

சைபர் குற்றப் புகார் – கட்டணமில்லா எண்

image

சென்னை சைபர் கிரைம் போலீசார் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “ஆர்.பி.ஐ.யால் அங்கீகரிக்கப்படாத செயலில் மூலம் கடன் பெற வேண்டாம் என்றும், எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், இல்லையென்றால் மோசடி நபர்கள் உங்களுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, உங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவார்கள். அவ்வாறு நடந்தால், 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்” என அறிவுறுத்தியுள்ளது.

News November 8, 2024

பணியிடத் துன்புறுத்தலா? இந்த எண்ணை அழையுங்க

image

பெருநகர சென்னை காவல்துறையானது பெண்கள் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பாக வேலை செய்ய வேண்டுமென்பதற்காக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பணியிட துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள், உயர் அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றால் 181 கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 8, 2024

விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது நாய்கள் கருத்தடை மையம்

image

சென்னையில் லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பில் கட்டப்பட்டுள்ளன நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. நவீன அறுவை சிகிச்சை அரங்கம், தடுப்பூசி மையம், உயிரிழந்த செல்லப் பிராணிகளை எரியூட்ட தகனமேடை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

News November 8, 2024

கடந்த 15 நாட்களாக அதிகரிக்கும் ‘மெட்ராஸ் ஐ’

image

சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ விழி வெண்படல அழற்சி அதிகரித்து வருகிறது. இதற்கு, சுயமாக சிகிச்சை எடுத்துக் கொள்ள கூடாது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கண் மருத்துவமனைகளில் 15% வரை நோயாளிகள் அதிகரித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் கண்களைப் பார்த்தால் மெட்ராஸ் ஐ பரவும் என்ற ஒரு கூற்று உள்ளது. அது மிகவும் தவறானது. தொற்று பதித்தவர்கள் பயன்படுத்திய பொருளை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!