India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் தெரிவிக்கவும்
சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்தி குறிப்பில், 2024-2025க்கு புதிதாக துவங்கப்படவுள்ள அரசு சிறுபான்மையினர் நலக்கல்லூரி மாணவர் விடுதி சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல தொழிற்பயிற்சி மாணவர் விடுதியுடன் கூடுதலாக இணைந்து செயல்பட உள்ளது. சிறுபான்மையின மாணவர்கள் இந்த கல்லூரி விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் என்கிறார்
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
இயல்பான நடிப்புத் திறனால், அனைத்துக் கதாபாத்திரங்களிலும், மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற டெல்லி கணேஷ் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டுகிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் நவ.13ஆம் தேதி முதல் சென்னை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சென்னை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் காலமான நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட X பதிவில், திரையுலகின் மூத்த கலைஞர் டெல்லி கணேஷ் சார் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன் எனக் கூறியுள்ளார். அவரின் மரணம் கலையுலகிற்கு பேரிழப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 9 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, புனே, குவஹாத்தி உள்ளிட்ட 4 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்தாகின. இதனால், விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். நிர்வாக காரணங்களால் இந்த விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் ராமாவரத்தில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். கடந்த ஒரு மாதங்களாக பல்வேறு உடல்நலக் குறைவு காரணமாக தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் காலமானார். திரைப்பட உலகின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் பல படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து சரக்கு முனையத்தை நோக்கி கண்டெய்னர்கள் இல்லாத திறந்த காலி சரக்கு ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில், ரயிலின் இரண்டு பெட்டிகளில் உள்ள 8 சக்கரங்கள் நேற்று தடம்புரண்டது. இதனால், கடற்கரை நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகள் அவதிப்பட்டனர்.
காசிமேடு மீனவர்கள் 7 பேர் கடந்த 2023, டிசம்பர் மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களை மீட்டு தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் நாஞ்சில் பீ.ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.