Chennai

News November 15, 2024

புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

image

பராமரிப்பு பணிகளால் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே, வரும் 17ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கடற்கரை – பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயங்கும். செங்கல்பட்டு, காஞ்சி, திருமால்பூர், அரக்கோணம் செல்லும் ரயில்கள் அட்டவணைப்படி இயங்கும் என சென்னை தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News November 15, 2024

கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு

image

தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தகவல் மையம் 24.01.2025 வரை செயல்படும். தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இத்தகவல் மையச் சேவையினை கட்டணமில்லா தொலைபேசி எண்களான 044-28339999 0 1800 425 1757 ஆகியவற்றில் அழைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

News November 15, 2024

டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை

image

மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக, கூடுதலான எண்ணிக்கையில் காவலர்கள் ரோந்து சென்று அனைத்து மருத்துவமனைகளையும் கண்காணிக்கவும், இரவு நேர பாதுகாப்பையும் அதிகரிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News November 15, 2024

சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டிலிருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் பம்பை வரை இயக்கப்படுகின்றன. இன்று முதல் ஜனவரி 16 வரை தினமும் பம்பை வரை அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. டிசம்பர் 26 முதல் 29-ம் தேதி வரை 4 நாட்கள் மட்டும் கோயில் நடை சாத்தப்படுவதை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 15, 2024

விஜய் போல் நானும் அரசியலுக்கு வந்தேன் – சரத்குமார்

image

விஜய் அரசியலுக்கு வந்தது வரவேற்கத்தக்கது எனவும், ஆனால் யாரும் சொல்லாத விஷயத்தை விஜய் அழுத்தமாக சொல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார் பாஜக பிரமுகர் சரத்குமார். மேலும், விஜய்யை போல திரையுலகில் மிகவும் உச்சத்தில் இருந்த போதுதான் நானும் அரசியலுக்கு வந்தேன். பொறுப்புடன் இருக்க வேண்டுமென பாஜகவில் இணைந்தேன். பொறுப்பு எதிர்பார்த்து இணையவில்லை என தெரிவித்தார்.

News November 15, 2024

SK பட ஷூட்டிங் நடந்ததால் போக்குவரத்து நெரிசல்

image

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்று சென்னை பெருங்களத்தூர் மேம்பாலத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் மேம்பாலத்தில் இருந்து குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்ட நிலையில், வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நின்று ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

News November 15, 2024

சென்னையில் ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து

image

சென்னையில் முன்னறிவிப்பு இன்றி இன்று 10 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கொல்கத்தா, புவனேஸ்வர், பெங்களூரு, திருவனந்தபுரம், சிலிகுரி செல்ல வேண்டிய 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பெங்களூரு, திருவனந்தபுரம், புவனேஸ்வர், கொல்கத்தா, சிலிகுரியிலிருந்து சென்னை வரவேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. முன்பதிவு செய்து பயணிக்க இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

News November 15, 2024

துணை முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

சென்னை மாநகராட்சியில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, போக்குவரத்து மற்றும் சாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான உயர்நிலை ஆய்வுக் கூட்டம் துணை முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக முன்னுரிமை கொடுத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டிய சாலைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

News November 15, 2024

சென்னையில் வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்

image

சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும், தங்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில், வரும் சனி மற்றும் ஞாயிறு (நவ.16, 17) வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. புதிய வாக்காளர் பதிவு, வாக்காளர் பெயர் திருத்தம், மற்றும் பெயர் நீக்கம் போன்ற அனைத்து சேவைகளுக்காக நடைபெறுகிறது. QR கோடு ஸ்கேன் செய்து இணையத்திலும் படிவத்தை சமர்ப்பிக்கலாம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 15, 2024

கிண்டி மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு

image

சென்னை கிண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பித்தப்பை கல் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரும்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் மரணம் அடைந்துள்ளார். மருத்துவர்கள் இல்லாததே விக்னேஷ் உயிரிழப்பிற்கு காரணம் என உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!