Chennai

News November 19, 2024

9 இடங்களில் ரூ.176 கோடி செலவில் துணைமின் நிலையங்கள்

image

சென்னையில் கலைவாணர் அரங்கில் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், கோடைகாலத்தை எதிர்கொள்ளும் விதமாக, சென்னை மண்டலத்தில் மாதவரம் ரேடியன்ஸ், மகாகவி பாரதியார் நகர், பருத்திப்பட்டு, சதர்ன் அவென்யூ, சோழவரம், புதுப்பேட்டை, முண்டக்கன்னியம்மன் கோவில், டேவிட்சன் தெரு, கணேஷ் நகர் ஆகிய 9 இடங்களில் ரூ.176 கோடி மதிப்பீட்டில் 33/11 கிலோ வோலட் துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

News November 19, 2024

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை போக்சோவில் கைது

image

அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (43). கொத்தனார் வேலை செய்து வரும் இவர், தனது 13 வயது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி அவரது மனைவி அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதுகுறித்து சிறுமியிடம் போலீசார் விசாரித்து பின், அவரது தந்தை வெங்கடேசனை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 19, 2024

சென்னை ZOHO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

image

சென்னையில் செயல்பட்டு வரும் ‘ZOHO’ நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நெட்வொர்க் ஆபரேஷன்ஸ் இன்ஜினியர் (Network Operations Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் ZOHO-வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்யலாம்.

News November 19, 2024

4,000+ கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

image

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பதை கண்காணிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 4,000க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு வருகின்றன. கேமரா பதிவுகளை, சென்னையில் உள்ள பொது சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும்.

News November 19, 2024

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவித்தொகைக்கு

image

முழு நேர அல்லது பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வட சென்னையைச் சேர்ந்த ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

பிரபல ரவுடி வீட்டில் ஐடி சோதனை

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சீசிங் ராஜா, கடந்த செப்.23ஆம் தேதி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தொடர்புடைய இடங்களில், வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். தாம்பரத்தில் உள்ள சீசிங் ராஜா வீடு மற்றும் சேலையூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததின் காரணமாக, சோதனை நடைபெற்று வருகிறது.

News November 19, 2024

எழும்பூர் ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கம்

image

எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி காரணமாக, 3 ரயில்கள் தாம்பரத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை எழும்பூர் – ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விரைவு ரயில் வரும் 23ஆம் தேதியில் இருந்தும், சென்னை எழும்பூர் நாகர்கோவில் விரைவு ரயில் வரும் 21ஆம் தேதியில் இருந்தும், சென்னை எழும்பூர் – செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில் வரும் 20ஆம் தேதியில் இருந்தும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News November 19, 2024

பராமரிப்பு பணி காரணமாக தண்ணீர் விநியோகம் நிறுத்தம்

image

தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு, பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் (நவ.20, 21) குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அந்நேரங்களில், வள்ளுவர் கோட்டம் குடிநீர் பகிர்மான நிலையம், தென்சென்னை குடிநீர் பகிர்மான நிலையம் மற்றும் கீழ்ப்பாக்கம் குடிநீர் பகிர்மான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

News November 19, 2024

மாஞ்சா நூலில் காற்றாடி விவகாராத்தில் 8 பேர் கைது

image

வியாசர்பாடி மேம்பாலத்தில் தந்தையுடன் பைக்கில் சென்றபோது மாஞ்சா நூல் அறுத்து, இரண்டரை வயது குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மாஞ்சா நூலில் காற்றாடி பறக்கவிட்ட 8 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். இந்நிலையில், தனது குழந்தை தற்போது நலமாக உள்ளதாக தெரிவித்த தந்தை பாலமுருகன், “இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் நடவடிக்கை வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

News November 19, 2024

பேருந்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

image

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் சாதாரண, விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளில் நடத்துநர்கள் பயணிகள் கொண்டு வரும் சுமைகளுக்கு (Luggage), சுமைக் கட்டணம் வசூலிக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்துகளில் 1 பயணி சொந்த உபயோகத்திற்கான 20 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!