India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வரும் டிச.6ஆம் தேதி தேதி சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில், விசிக தலைவர் திருமாவளன் மற்றும் த.வெ.க தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அந்த விழாவில் திருமா பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. “அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா” என்று விஜய் கூறிய பிறகும், ஒரே மேடையை பகிர்ந்து கொண்டால் குழப்பங்களை உருவாக்கும் என்று புறக்கணிப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகர் தனுஷிடம் விவாகரத்து பெறும் விசாரணைக்காக, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். விவாகரத்து வழக்கு தொடர்பாக, நடிகர் நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் மனு அளித்திருந்த நிலையில், தற்போது வழக்கு விசாரணைக்காக ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 3 விசாரணையின்போதும் இருவருமே ஆஜராகாத நிலையில் இன்று ஐஸ்வர்யா மட்டும் ஆஜரானரது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் எழும்பூர், ஜார்ஜ் டவுன் மற்றும் சைதாப்பேட்டை சட்டப்பணிகள் குழுவிற்கு, சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களாக சேவை புரிய விருப்பமானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் chennai.dcourts.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து நாளைக்குள் (நவ.22) அலுவலக முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்க
சென்னையில், அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிறு கால்வாய்களை தூர்வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மணலி துளசி நகர் கால்வாயில் காணப்பட்ட வண்டல் கழிவுகள் நேற்று தூர்வாரி அகற்றப்பட்டது. கொடுங்கையூர் கால்வாய் முழுவதும் தேங்கி காணப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் – புது டெல்லி, மங்களூர் – போடிநாயக்கனூர், சென்னை எழும்பூர் – தூத்துக்குடி, கன்னியாகுமரி – ஹவுரா வழித்தடங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், வழக்கத்தை விட 7,900 பேர் பயணிக்கும் வகையில் இருக்கை வசதி அதிகரித்துள்ளது. வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் மேலும் 27 எக்ஸ்பிரஸ் ரயில்களில் 56 பொதுப்பெட்டிகள் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடையாறு பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த மாநகரப் பேருந்தை, மெக்கானிக் குணசேகரன் என்பவர் குடிபோதையில் நேற்று அதிவேகமாக இயக்கிச் சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள காவல் நிலையத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இதனால் காவல் நிலைய சுற்றுச்சுவர் மற்றும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரனிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 23ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி 2025 ஜனவரி 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில், 50 நாடுகளின் பதிப்பகங்கள் பங்கேற்கின்றன. இந்த புத்தகக் கண்காட்சியில் குழந்தைகள் இலக்கியத்தை மையப்படுத்தி, குழந்தைகள் அரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் 76ஆவது தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 28 மாநிலங்கள் – 8 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த வீரர், வீராங்கனையர் பங்கேற்ற இப்போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் 16 பதக்கங்களை குவித்து சாதனை படைத்தனர். இவர்கள் நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சென்னையில் குழந்தை உட்பட 2 பேரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாஞ்சா நூல் விற்பனை குறித்து புதிய தகவல்களும் வெளியாகி வருகின்றன. அண்மை காலங்களில் குறைந்து இருந்த மாஞ்சா பட்டம் கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த 17ஆம் தேதி மாஞ்சா பட்டத்தின் நூல் அறுத்ததில் இரண்டரை வயது குழந்தை உட்பட இருவரின் கழுத்து அறுப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.