Chennai

News November 29, 2024

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை

image

காசிமேடு, எண்ணூர், ராயபுரம், திருவொற்றியூர், புது வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, திருவல்லிக்கேணி, அடையாறு, திருவான்மியூர், பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர், சிந்தாதிரிப்பேட்டை, சாந்தோம், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்க ஏரியாவில்?

News November 29, 2024

கனமழை காரணமாக மின்வாரியம் அறிவுறுத்தல்

image

*மின் கம்பிகள், மின்சார கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் அருகில் செல்ல வேண்டாம். *மின் கம்பங்கள், மின் சாதனங்களுக்கு அருகே தேங்கி நிற்கும் மழைநீரில் செல்ல வேண்டாம். *தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்ல வேண்டாம். *ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சாதன பொருட்களை இயக்க வேண்டாம். *மின் ஒயர் இணைப்புகளை இன்சுலேஷன் டேப் சுற்றி வைக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News November 29, 2024

சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இன்று (நவ.29) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். மேலும், சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருங்கள். ஷேர் செய்யுங்கள்

News November 28, 2024

ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ – ஒப்பந்தம் ஏற்பு

image

சென்னை மெட்ரோ இரயில் 2ஆம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5-ல் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 70 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ இரயில் 2026-ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என BEML நிறுவனம் தெரிவித்துள்ளது. 

News November 28, 2024

சென்னையில் இன்று இரவிலிருந்து மழை தொடரும்

image

சென்னையில் இன்று இரவு முதல் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை (நவ.29) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவ.30 அன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை முதல் நாளை காலைக்குள் தற்காலிக புயலாக மாறும் எனவும், அது வலுவிழந்து வரும் நவ.30ஆம் தேதி கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2024

அதிமுகவில் யாரும் பிரிந்து செல்லவில்லை: ஜெயக்குமார் 

image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளுக்கு பேரணி நடத்த, நேற்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அனுமதி கேட்டுள்ளார். அப்போது பேட்டி அளித்த அவர், “அதிமுகவில் யாரும் பிரிந்து செல்லவில்லை. பொதுக்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. சசிகலா, ஓபிஎஸ், டிடிவி குடும்பத்தை சார்ந்தவர்களை தவிர மற்றவர்களை கட்சியில் சேர்ப்பது குறித்து இபிஎஸ் தான் முடிவு செய்வார்” என்றார்.

News November 28, 2024

சென்னையில் இன்று ‘கரண்ட் கட்’ நோட் பண்ணிக்கோங்க

image

சென்னையில் இன்று (நவ.28) பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், காலை 9 மணி – மதியம் 2 மணி வரை RA புரம், MRC நகர், ராஜா முத்தையாபுரம், அண்ணா நகர், சந்தோம் ஹைரோடு, கஸ்தூரி அவென்யூ, காமராஜ் சாலை மற்றும் RK நகர், திலகர் நகர், VOC நகர், டோல்கேட், ஸ்டான்லி, பழைய வண்ணாரப்பேட்டை, கல்மண்டபம், GA ரோடு, TH ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள்.

News November 28, 2024

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 27, 2024

கல்லூரி மாணவர்கள் மீது 231 வழக்குகள் பதிவு

image

சென்னையில் அடிதடியில் ஈடுபட்டதாக கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் மீது 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மோதல் சம்பவங்களை தடுக்க மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரியின் முதல்வர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என  சென்னை உயர் நீதிமன்றத்தில் உயர் கல்வித்துறை செயலாளர் இன்று பதிலளித்துள்ளார்.

News November 27, 2024

மெட்ரோ ரயில் பணி கம்பிகள் சாய்ந்ததால் பரபரப்பு

image

பூவிருந்தவல்லியில் மெட்ரோ ரயில் பணிக்காக கட்டப்பட்டு வரும் தூணில் கம்பிகள் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக கம்பிகள் மட்டும் கட்டப்பட்டு அதில் கட்டுமான வேலைகள் செய்யாததால் அதிக பாரம் தாங்காமல் ஒருபுறமாக சாய்ந்தது. தன்னால் அப்பகுதியில் கடும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. மேலும், சாய்ந்த கம்பிகளை நிலைநிறுத்த 2 ராட்சத கிரேன் இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.

error: Content is protected !!