India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மெரினாவில் நடைபெறும் உணவு திருவிழாவில், 17ஆம் நம்பர் ஸ்டாலில் Beef கிரேவி, Beef சுக்கா விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. Beef புறக்கணிக்கப்படுவதாக நீலம் பண்பாட்டு மையம் குற்றம்சாட்டிய நிலையில், தற்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சென்னை மெரினா உணவு திருவிழாவில் Beef விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் உணவுத் திருவிழாவில், மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன?. பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது என இயக்குநர் பா. ரஞ்சித் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் கடந்த நவ.28ஆம் தேதி முதல் டிச.4ஆம் தேதி வரை ஆண்களுக்கான கருத்தடை முகாம் நடத்தப்பட்டது. 15 மண்டலங்களில் நடைபெற்ற முகாம்களில் 59 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். லட்சக் கணக்கான ஆண்கள் வசிக்கும் ஒரு நகரில் 100 பேர் கூட பங்கேற்காத இந்த முகாம் தோல்வியில் முடிந்ததாகவே மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், பெரும்பாலான பெண்கள், தங்கள் கணவருக்கு பதிலாக தாங்கள் கருத்தடை செய்துகொள்வதாக கூறுகிறார்களாம்.
சென்னை வேளச்சேரி பிரதான சாலையின் தடுப்பு மீது மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாக வந்த பைக் சாலை தடுப்பு மீது சுமார் 20 அடி உயரத்திற்கு பைக் தூக்கி வீசப்பட்டது. இதில், பைக்கில் பயணித்த விஷ்ணு (24) மற்றும் கோகுல் (24) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மது போதையில் வாகனம் ஒட்டி விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடா் விடுமுறையால் விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்ந்துள்ளது. (சென்னையிலிருந்து) தூத்துக்குடிக்கு ரூ.14,281 (ரூ.4,796), மதுரைக்கு ரூ.17,695 (ரூ.4,300), திருச்சிக்கு ரூ.14,387 (ரூ.2,382), மைசூருக்கு ரூ.9,872 (ரூ.3,432), கோவைக்கு ரூ.9,418 (ரூ.3,485) சேலத்திற்கு ரூ.8,007 (ரூ.3,537), திருவனந்தபுரத்திற்கு ரூ.13,306 (ரூ.3,821), கொச்சிக்கு ரூ.18,377 (ரூ.3,678). ஷேர் பண்ணுங்க
சென்னையில் இன்று (21.12.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பாக ஏதேனும் புகார்கள் அல்லது குறைகள் இருந்தால், சென்னை குடிநீர் வாரியத்தை தொடர்புகொண்டு புகார் கொடுக்க கட்டணமில்லா உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. புகார்களுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் 044-4567 4567, 1916 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
கீழ்பாக்கம் அடுத்த புல்லாபுரத்தில், ராம்குமார்- திவ்யா தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறில், தனது ஒன்றரை வயது குழந்தை புனித் குமாரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மற்றொரு குழந்தை லஷ்சன் குமாரை(4.5) கொல்ல முயற்சி செய்த தாய் திவ்யா, அவரும் தற்கொலைக்கு முயன்றார். ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தையையும், தாய் திவ்யாவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, உள்நாட்டு, வெளிநாட்டு விமான டிக்கெட்டுகள் விலை உயர்ந்தன. சென்னை – தூத்துக்குடி வழக்கமான கட்டணம் – ₹4,796, இன்றைய கட்டணம் – ₹14,281. சென்னை – மதுரை வழக்கமான கட்டணம் – ₹4,300, இன்றைய கட்டணம் – ₹17,695. சென்னை – தாய்லாந்து வழக்கமான கட்டணம் – ₹8,891, இன்றைய கட்டணம் ₹17,437 ஆக உயர்ந்துள்ளது.
தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது, சென்னைக்கு 390 கி.மீ., கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ., வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.