Chennai

News December 26, 2024

குகேஷை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்

image

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைத்தார். அவரை, நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தனது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டு தெரிவித்தார். அவருடன் இணைந்து கேக் வெட்டி மகிழ்ந்த சிவகார்த்திகேயன், குகேஷுக்கு விலையுயர்ந்த வாட்சை பரிசளித்தார்.

News December 26, 2024

சென்னையில் காற்றுடன் கூடிய கனமழை

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ராயபுரம், திருவொற்றியூர், எண்ணூர், மணலி, கொடுங்கையூர், கிண்டி, சைதாப்பேட்டை, வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கீழ்பாக்கம், முகப்பேர், நீலாங்கரை, பெரம்பூர், வில்லிவாக்கம், அயனாவரம், சேப்பாக்கம், அடையாறு, பள்ளிக்கரணை, அம்பத்தூர், கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. உங்க ஏரியாவில் ?

News December 25, 2024

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (டிச.25) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 25, 2024

சென்னையில் பெறப்பட்ட 37,371 புகார்கள்

image

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பதாக 17,235 புகார்கள் பெற்றப்பட்டுள்ளன. குறிப்பாக 1913 அவசர கால கட்டுப்பாட்டு அறை மூலம், சென்னை மாநகராட்சியில், உள்ள 15 மண்டலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து நேற்று முன்தினம் வரை, பொதுமக்களிடம் இருந்து 37,371 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

News December 25, 2024

பாலியல் சீண்டல்; கைதானவரின் பகீர் பின்னணி 

image

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த ஞானசேகர்(37) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு இதே போன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. காதலர்களை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இவர் மீது திருட்டு, வழிப்பறி போன்ற 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் அம்பலமாகியுள்ளது. 

News December 25, 2024

பல்கலை.யில் பாலியல் துன்புறுத்தல்; போராட்டம் வாபஸ்

image

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர் 2ஆம் ஆண்டு பயிலும் மாணவி மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்து வரும் நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பிறகு தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

News December 25, 2024

சென்னையில் வீடு இல்லாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு

image

சென்னையில் வீடு இல்லாதவர்கள் குறித்து அடுத்த மாதம் சென்னை மாநகராட்சி சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த கணக்கெடுப்பின் போது இருந்ததை விட தற்போது சென்னையில் வீட்டில் இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலையோரம், மேம்பாலங்களில் கீழ் தங்கி வாழ்பவர்கள் அதிகரித்துள்ளதால் வீடு இல்லாதவர் எண்ணிக்கை அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 25, 2024

சென்னையில் நாளை மறுநாள் வேலைவாய்ப்பு முகாம்

image

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கை: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து வரும் 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகின்றன.

News December 25, 2024

சென்னை – புவனேஸ்வர் விமான சேவை துவக்கம்

image

சென்னையில் இருந்து ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் இடையே, தினசரி மூன்றாவது விமான சேவையை, ஜன.,14 முதல் இண்டிகோ நிறுவனம் துவங்க உள்ளது. இதன்படி, சென்னையில் இருந்து தினசரி காலை 8:30 மணிக்கு புறப்படும் விமானம் காலை 10:20 மணிக்கு புவனேஷ்வர் சென்றடையும். புவனேஸ்வரிலிருந்து காலை 11:00 மணிக்கு புறப்படும் விமானம் பகல் 12:40 மணிக்கு சென்னை வந்தடையும்.சென்னை- புவனேஸ்வர் இடையே மொத்தம்,5 விமான சேவை இயக்கப்படுகிறது.

News December 25, 2024

கிறிஸ்துமஸ் பண்டிகை பாதுகாப்பு பணியில் 8,000 போலீஸ்

image

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்படி, பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு 8,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவாலயங்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்வதால், 24.12.24 அன்று இரவு முதல் 25.12.24 வரை சுமார் 350 தேவாலயங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார் ஆணையாளர்.

error: Content is protected !!