India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யபிரியா என்ற பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் இன்று மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த இந்த கொடூர கொலை, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மகள் இறந்த துயரத்தை ஏற்க முடியாத தந்தை அன்றே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிபிசிஐடி காவல்துறை தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் நேற்று (டிச.26) ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக, பாஜக கட்சியினர் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் கிண்டி சாலை பகுதியில் பரபரப்பு நிலவியதோடு, கடும் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று (டிச.26) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
மைலாப்பூரில் உடலில் பிசாசு புகுந்து இருப்பதாகவும், அதனை விரட்ட தனது வீட்டுக்கு வரும்படியும் 26 வயது இளம் பெண்ணிடம் கூறி அப்பெண்ணிடம் கெனிட் ராஜ்(50) என்ற சர்ச் ஃபாதர் பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மைலாப்பூர் அனைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கத்தோலிக்க சர்ச் ஃபாதர் கெனிட் ராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மேலும் ஒரு மாணவியிடம் ஞானசேகரன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்திய போது அவரது தோழி ஒருவரிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. கடந்த 21ஆம் தேதியே மேலும் ஒரு மாணவிக்கு ஞானசேகரன் பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியுள்ளார்.
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டார். பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியிட வேண்டும். தலைமறைவாக இருப்பவர்களையும் கைது செய்ய வேண்டும்” என்றார்.
மழை பொழிவு காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு வருவோரில் 40% பேருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதாக மருத்துவா்கள் கூறியுள்ளனா். அதில், பெரும்பாலானோருக்கு ‘இ-கோலி’ எனப்படும் தீங்கு விளைவிக்கும் ஜீரண மண்டல பாக்டீரியா தொற்று ஆகும்.
ஓ.எம்.ஆர்., சாலையில் அமைந்துள்ள சிஷ்யா பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருபவர் ஆதிரை என்ற சிறுமி. இவர், தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற 62ஆவது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 7 – 9 வயது பிரிவினருக்கான ஸ்கேட் போர்ட் பிரிவில் 3ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Way2News சார்பில் வாழ்த்துக்கள்.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை. தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலால், சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஷேர் பண்ணுங்க
சென்னையில் கடந்த 2 தினங்களாக வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டு வந்த நிலையில், சென்னையில் நேற்று மதியம் முதலே மழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்ல முடியமால் வீடுகளிலேயே முடங்கினர். காற்றுடன் கூடிய சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.