Chennai

News January 5, 2025

ஞானசேகரன் மீது பாய்ந்தது குண்டாஸ்

image

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் படி சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சிறப்பு புலனாய்வு குழு (SIT) பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஞானசேகரன் மீது ஏற்கனவே 3 முறை குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், 4வது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News January 5, 2025

மக்கள் தொகையில் சென்னை முதலிடம்

image

தமிழ் நாடு புவியியல் சார்பில் 2022ஆம் ஆண்டிற்கான தமிழ் நாட்டில் மக்கள் தொகை அதிகமுள்ள 10 மாவட்டங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை 72.3 லட்சம் மக்கள் தொகையுடன் முதல் இடத்தில் உள்ளது. 2ஆம் இடத்தில் சேலம் மாவட்டமும், 3ஆம் இடத்தில் கோவையும் உள்ளது. மேலும், மாநிலத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட (6 லட்சம் மக்கள் தொகை) மாவட்டமாக பெரம்பலூர் உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News January 5, 2025

குறைந்தது 8 முதல் 9 மணி நேரம் உறங்க வேண்டும்: ஆளுநர் 

image

கிண்டி ராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது, குழந்தைகள் அனைவரும் குறைந்தது 8 முதல் 9 மணி நேரம் உறங்க வேண்டும். பிரதமர் எழுதிய ‘exam warriors’ புத்தகத்தை அனைத்து குழந்தைகளும் படிக்க வேண்டும். மாணவர்கள் வாழ்வில் நேர மேலாண்மையை நெறிப்படுத்துவது, தேர்வுக்கு தயாராகுவது, லட்சியத்தையும் கனவை அடைவது பற்றி பிரதமர் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்” என்றார்.

News January 5, 2025

அண்ணா மேம்பாலத்தில் கார் மோதி விபத்து

image

சென்னை தேனாம்பேட்டை வழியாக எல்.ஐ.சி. நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக அண்ணா மேம்பாலம் முகப்பு சுவரில் மோதி விபத்தில் சிக்கியது. காரில் இருந்த ஏர்பேக் சரியான நேரத்தில் செயல்பட்டதால், கார் ஓட்டுநர் மற்றும் அருகில் அமர்ந்திருந்த பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுதொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த தேனாம்பேட்டை போலீசார் மேம்பாலத்தில் மோதியிருந்த காரை உடனடியாக சரி செய்னர்.

News January 5, 2025

தலைமை செயலகம், டிஜிபி அலுவலகத்துக்கு மிரட்டல்

image

இன்று காலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தலைமை செயலகம் மற்றும் டி.ஜி.பி. அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். அதன் பேரில், போலீசார் தலைமை செயலக வளாகம் மற்றும் டி.ஜி.பி. வளாகம் முழுவதும் மோப்ப நாயுடன் சோதனை செய்தனர். அதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. மர்ம நபரின் மொபைல் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 5, 2025

பிரம்மாண்ட மாரத்தான் போட்டி தொடக்கம்

image

பிரெஷ் ஒர்க்ஸ் இன்க் மற்றும் தி சென்னை ரன்னர்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து நடத்தும், சென்னை மாரத்தான் போட்டியின் 13ஆவது சீசன் இன்று (ஜன.5) காலை 4 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில், 25,000க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக நடக்கும் இப்போட்டியில், சக்கர நாற்காலி மூலம் 65 மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 5, 2025

மெரினா கடற்கரை சாலையில் கார் விபத்து

image

மெரினா கடற்கரை சாலையில் நேற்று நள்ளிரவில் சாலையைக் கடந்த பசு மாட்டின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மாடு மற்றும் மாட்டின் வயிற்றில் இருந்த குட்டி உயிரிழந்தது. விபத்துக்குள்ளான கார், மருத்துவத்துறைக்கு சொந்தமான வாகனம். மாடு திடீரென குறுக்கே வந்ததால் விபத்து நடந்துள்ளது. மாடு உயிருக்கு போராடியபோது, கால்நடை மருத்துவமனைகளை கூகுளில் தேடி தொடர்பு கொள்ளும்போது, பல எண்கள் உபயோகத்தில் இல்லை.

News January 5, 2025

கடற்கரை – தாம்பரம் இடையே புறநகர் ரயில்கள் ரத்து

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் New Foot Over Bridge பணிகள் நடைபெற இருப்பதால், இன்று (ஜன.5) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் ரயில்கள் பல்லாவரம் வரையும், அதேபோல் செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் காலை 11 மணி முதல் மாலை 4 வரை செங்கல்பட்டிலிருந்து கூடுவாஞ்சேரி வரையும் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News January 5, 2025

அவசர உதவிக்கு காவல் உதவி செயலி

image

எந்த நேரத்திலும் உங்களுக்கு அவசர நிலை வரலாம். ஒரே ஒரு பொத்தானை அழுத்தினால் போதும், சென்னை பெருநகர காவல் உங்களுக்கு உதவ தயாராக உள்ளது. அருகில் உள்ள காவலர்களுக்கு தகவல் அளிப்பது முதல் அவசரகால உதவி எண்களுக்கான உடனடி அணுகல் வரை, இந்த செயலி உங்களது டிஜிட்டல் லைஃப்லைன் ஆகும். இப்போதே பதிவிறக்கம் செய்து, எப்போதும் பாதுகாப்பாக இருங்கள் என்று திருநகரை சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

News January 4, 2025

செல்லப் பிராணிகளுக்கு கட்டுப்பாடுகள் ரத்து!

image

சென்னையில் உள்ள ஆட்ரியம் அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்போர் சங்கம் சார்பில் செல்லப்பிராணிகள் மலம் கழித்தால் ரூ.3000 அபராதம் மற்றும் செல்லப் பிராணிகளை வைத்துக்கொண்டு லிப்ட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தற்போது செல்லப் பிராணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!