Chennai

News January 7, 2025

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 6, 2025

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

image

சென்னையில் கடந்த 10 நாட்களாக காற்றின் தர குறியீடு மிகவும் மோசம் அடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒட்டுமொத்த சென்னையின் காற்று மாசு தர குறியீடு 177 என்ற அளவுக்கும், மணலியில் அதிகபட்சமாக 213 தர குறியீடு அளவுக்கும், நீலாங்கரை 150, வேளச்சேரியில் 162, ஆலந்தூரில் மிதமான அளவை குறிக்கும் 112 தர குறியீடு அளவில் காற்று மாசு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News January 6, 2025

பொங்கல் பரிசை கண்டித்து தேமுதிக போராட்டம்

image

தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டி, தேமுதிக சார்பில் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து ஆறுநாட்டு வேளாளர் மஹாலில் அடைத்தனர்.

News January 6, 2025

சென்னை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை சென்னையில் மாநகராட்சி இன்று கமிஷனர் குமரகுருபரன் வெளியிட்டார். சென்னை மாவட்டத்தில் 40,15,878 வாக்காளர்கள் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 19,70279 பேர் உள்ள நிலையில், பெண் வாக்காளர்கள் 20,44,323 பேர் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் 3ஆம் பாலின வாக்காளர்கள் 1276 பேர் உள்ளனர்.

News January 6, 2025

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

image

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ 100.90க்கும், டீசல் 92.49க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News January 6, 2025

கொடுங்கையூரில் காய்ச்சலால் 3 வயது சிறுமி பலி

image

கொடுங்கையூர், கருணாநிதி தெருவைச் சேர்ந்தவர் சாந்தம். இவரது 3 வயது மகள் டெனிஷா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த 3ஆம் தேதி கொடுங்கையூர், எத்திராஜ் சுவாமி சாலையில் உள்ள கே.வி.டி., மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.  அங்கு நேற்று உயிரிழந்த நிலையில், மருத்துவமனையின் கவன குறைவால் குழந்தை இறந்து விட்டதாக கூறி, குழந்தையின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

News January 6, 2025

இன்று தொடங்கும் சட்டப்பேரவை கூட்டம்

image

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று (ஜன.06) காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இன்றைய கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை மட்டுமே இடம்பெறும். மற்ற விவாதங்கள் எதுவும் இன்றைய கூட்டத்தில் அனுமதிக்கப்படாது. இந்நிலையில், ஆளுநர் உரையாற்றுவதற்கான அரசின் கொள்கை சார்ந்த குறிப்புகள் தொகுக்கப்பட்டு அவரிடம் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 6, 2025

ரத்தக்கறையுடன் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்

image

வியாசர்பாடி அருகே ரயில்வே ட்ராக்கில் ரத்தக்கறையுடன் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அளித்த தகவலின் பேரில் சென்ற போலீசார் துணியில் சுற்றப்பட்ட நிலையில் வளர்ச்சி அடையாத ஆண் குழந்தை சிசுவின் சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அபார்ஷன் செய்து சிசுவை தூக்கி வீசப்பட்டதா என என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 6, 2025

சென்னையில் இன்று ஸ்மார்ட் அட்டை வசதி அறிமுகம்

image

‘சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை திட்டம்’ மெட்ரோ ரயில் சேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று முதல் சென்னை மாநகர பேருந்துகளிலும் ஸ்மார்ட் அட்டை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ என 3 பொது போக்குவரத்திலும் இந்த அட்டையை வைத்து பயணிக்க முடியும். ஸ்மார்ட் அட்டைகள் கோயம்பேடு, பிராட்வே பேருந்து நிலையங்களில் விநியோகிக்கப்பட உள்ளன.

News January 6, 2025

சென்னையில் இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (ஜன.05) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!