Chennai

News January 11, 2025

ஒரே நாளில் மட்டும் 1,87,330 பேர் பயணம்

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் தேவை கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று (ஜன.10) ஒரே நாளில் மட்டும் 1,87,330 பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நேற்று இரவு முதல் சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News January 11, 2025

Way2Newsல் நிருபராக விருப்பமா?

image

தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News Appல் சென்னை மாவட்ட செய்தியாளராக விருப்பமுள்ளவர்கள், இந்த <>லிங்கில் <<>>உங்களை பற்றிய தகவல்களை பதிவு செய்யவும். நீங்கள் பகுதி நேரமாக வருவாய் ஈட்ட இது ஒரு அறிய வாய்ப்பு. மேலும் விவரங்களுக்கு 9133022122 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். செய்தித்துறையில் இருப்பவர்களும் இதில் பதிவு செய்யலாம்.

News January 11, 2025

8 பெண் உதவி மேலாளர் பணியிடங்கள் காலி

image

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 8 பெண் உதவி மேலாளர் (சிவில்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு மாதம் ரூ. 62,000 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் பாடப்பிரிவில் B. E / B. Tech முடித்த 30 வயதுக்கு உட்பட்டவர்கள் பிப் . 10ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க <<>>வேண்டும். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News January 11, 2025

சென்னையில் டி20 போட்டி: நாளை டிக்கெட் விற்பனை

image

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இங்கிலாந்து அணி, 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் வரும் ஜனவரி 12ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டின் விலை ரூ.1,500இ-ல் இருந்து ரூ.15,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News January 11, 2025

சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு

image

தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (ஜன.11) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

News January 11, 2025

சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய தினங்களில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி இந்த இரு தினங்களில் மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

News January 11, 2025

சென்னையில் ரவுடிகள் தொடர்பான குற்ற நிகழ்வுகள் குறைவு

image

2024ஆம் ஆண்டு பிற்பகுதி அரையாண்டில், சென்னையில் ரவுடிகள் தொடர்பான கொலைகள் எதுவும் நடைபெறவில்லை. தொடர் குற்றம், கொடூர குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024-ல் மொத்தம் 1,302 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

News January 10, 2025

சர்வதேச பலூன் திருவிழா: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

image

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில், இன்று கோவளம் அருகே உள்ள திருவிடந்தையில் 10ஆவது தமிழ்நாடு – சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது. இதில், சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன், சிறு – குறு மற்றும் தொழிற்துறை அமைச்சர் தாமு அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 3 நாட்கள் இந்தத் திருவிழா நடைபெறும்.

News January 10, 2025

மேலும் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேலும் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை (ஜன.11) இரவு 11.35 மணிக்கும். மறுமார்க்கமாக, 12ஆம் தேதி பகல் 12 மணிக்கும், எழும்பூரில் இருந்து நெல்லைக்கு நாளை இரவு 11.45 மணிக்கும். மறுமார்க்கமாக, 12ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கும். சென்ட்ரலில் இருந்து மதுரைக்கு நாளை மதியம் 3.30 மணிக்கும், மறுமார்க்கமாக இரவு 7 மணிக்கும் புறப்படும்.

News January 10, 2025

கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்

image

சென்னையில், பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி பேருந்து, ரயில் முனையங்களுக்கு செல்வோரின் வசதிக்காக இன்று முதல் (ஜன. 10) வரும் 13ஆம் தேதி வரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!