India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் ஜன.12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, கடலோரப் பகுதிகளான சென்னை முதல் டெல்டா வரை மற்றும் தூத்துக்குடி பகுதிகளிலும் மழை பெய்யும். பொங்கல் விடுமுறை நாள்களில் மழை பெய்வது ஒன்றும் ஆச்சரியமான விஷயமல்ல. ஆனால், இந்த மழை ஒன்றும் உங்களது விடுமுறைக் காலப் பயணங்களை பாதிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்
சென்னையில் இன்று (11.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 9445014436 என்ற தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800-425-6151, 24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் காணும் பொங்கலன்று (ஜன.16) கடலில் குளிக்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் அன்றைய தினம் 16,000 போலீசார், 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல் ஆணையர் அருண் கூறியுள்ளார். பைக் சாகசத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என அமைச்சர் சிவசங்கர் கூறியதை கண்டித்தும் அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தி யார் அந்த சார்? என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக கருப்பு சட்டை அணிந்து வந்த போது எனக்கு கோபம் இல்லை, சிரிப்புதான் வந்தது. பேரிடர் நிதியை கூட தராமல் உள்ள ஒன்றிய அரசை கண்டித்து நீங்கள் கருப்பு சட்டை அணிந்திருந்தால் உங்களை நான் பாராட்டுவேன். ஆளுநரைக் கண்டித்து கருப்பு சட்டை அணியும் துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் காட்டமாக பேசினார்.
சட்டப்பேரவையில் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சட்டப்பேரவையில் சபாநாயகரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வழங்கினார். இவ்விவகாரத்தில், 12 நாட்கள் கழித்துதான் FIR பதிவு செய்யப்பட்டது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் குற்றம்சாட்டி எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடுத்திருந்த நிலையில், ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ரயிலில், முன்பதிவு டிக்கெட் தொடங்கி ஒரு சில நிமிடத்திலேயே முடிவடைவதால் பெரும்பாலானோர் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். அதிலும் சிலர் தங்களது சொந்த வாகனத்திலேயே விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் தேவை கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று (ஜன.10) ஒரே நாளில் மட்டும் 1,87,330 பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நேற்று இரவு முதல் சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News Appல் சென்னை மாவட்ட செய்தியாளராக விருப்பமுள்ளவர்கள், இந்த <
Sorry, no posts matched your criteria.