India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நண்பர்கள், உறவுகளை ஒருங்கிணைக்கும் நாளாக பார்க்கப்படும் காணும் பொங்கலான இன்று (ஜன.16), சென்னையில் மெரினா கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவார்கள். இதையொட்டி, சென்னையில் 17,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மெரினா கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
காசிமேட்டில் தொடர்ந்து 2ஆவது நாளாக கொலை சம்பவம் அரங்கேறியுள்ளதால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு (ஜன.15) வீட்டின் அருகே அமர்ந்து இருந்த வினோத் என்பவரை 3 பேர் கொண்ட கும்பல் முகத்தை சிதைத்து கொலை செய்தது. மக்கள் நடமாடும் இடத்தில் முகத்தை சிதைத்து கொடூர கொலை நடந்துள்ளதால், மக்கள் நடுங்கி போயுள்ளனர். நேற்று முன்தினம் இரவு இதே பகுதியில் உலக நாதன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நேற்று (ஜன.15) வரும் 19ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 12,216 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நேற்று சென்னைக்கு 800 பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று (ஜன.16) பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 900 பேருந்துகள் இயக்கபடவுள்ளன.
வடசென்னை புதுவண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டம் பகுதியில் வசித்து வந்த வினோத் என்பவர் தனது வீட்டின் அருகே அமர்ந்திருந்த போது பைக்கில் வந்த 3 பேர் கிரிக்கெட் மட்டையால் அவரை தாக்கியதோடு அரிவாளால் முகம் சிதையும் அளவிற்கு வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். நேற்று இரவு அருகில் உள்ள திடீர் நகரில் உலகநாதன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், 2வது நாளாக மீண்டும் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னையில் இன்று (15.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவான்மியூரில் பாத்திரத்தில் இருந்த வெந்நீரை தவறுதலாக தன்மீது ஊற்றிக்கொண்ட 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கேஸ் மீது இருந்த வெந்நீரை குழந்தையின் தாய் கீழே வைத்துவிட்டு சென்றுள்ளார். அப்போது வெந்நீர் இருந்த இடத்திற்கு சென்ற அந்த குழந்தை, தவறுதலாக மேலே ஊற்றிக்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு, மெரினா கடற்கரை அருகே பொதுமக்களின் வசதிக்காக வாகனங்களை நிறுத்த, ஃபோர்ஷோர் சாலை, விக்டோரியா வார்டன் விடுதி, கலைவாணர் அரங்கம் பார்க்கிங், மாநிலக் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், ஆடம்ஸ் சாலை (சுவாமி சிவானந்தா சாலை), ராணி மேரி கல்லூரி உள்ளிட்ட 14 இடங்களில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை (ஜன.16) காணும் பொங்கலை மெரினாவில் கொண்டாடுவோர் நோட் பண்ணிக்கோங்க
காசிமேடு திடீர் நகரில் ரவுடி லோகநாதன் நேற்று (ஜன.14) மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். வீட்டில் இருந்த லோகநாதன் மற்றும் மாலதியை, மர்ம நபர்கள் 9 பேர் வெட்டியதில் லோகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாலதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு, இன்று (ஜன.15) புதன்கிழமை சென்னையில் உள்ள மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) ஆகியவைகளின் கீழ் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்களும் இயங்காது. மீறி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது பிரியர்களுக்கு ஷேர் பண்ணுங்க
சென்னையில் இன்று (14.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.