India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், வாகன நெரிசலை கட்டுப்படுத்த நாளை பகல் 2 மணி வரை ஜி.எஸ்.டி. சாலை, வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை, ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர்., சாலைகளில் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. பரனூர் சுங்கசாவடி சர்வீஸ் சாலை வழியாக சென்று ஸ்ரீபெரும்புதூர் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்
சென்னையில் நேற்றிரவு முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், புழல், திருவொற்றியூர், மடிப்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையும் தெரிவித்துள்ளது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. உங்க ஏரியாவில் மழையா?
பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக, நாளை (ஜன.20) திங்கட்கிழமையன்று காட்டாங்குளத்தூர் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வந்திறங்கும் பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திரும்புவோருக்கு இந்தச் செய்தியை ஷேர் செய்யுங்கள்.
ஆவடி அருகே சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ஸ்டாலின், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரை மர்ம கும்பல் துரத்திச் சென்று கொலை செய்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்திருக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், இட்டைமலை சீனிவாசனிடம் தருண், சாலமன், இளங்கோ, ஜோகன், மாதேஷ் அடங்கிய கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் இருவரையும் கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற திமுகவின் சட்டத்துறை 3ஆவது மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு இரங்கல், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை திட்டம் நிறைவேறினால் அதனை எதிர்த்து வழக்கு தொடுக்கவும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் இன்று (18.01.2025) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள மக்கள் காவல்துறையினருக்கு புகார் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுமார் 40 வயதுடைய இறந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், காணும் பொங்கலுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் ரூ.2 கோடி வசூலாகியுள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் அன்று ஒரு நாளில் இயக்கப்பட்டன. அன்று இயக்கப்பட மாநகரப் பேருந்துகள் மூலம் சுமார் ரூ.2.06 கோடி வசூலாகியுள்ளது.
பொங்கல் பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் மக்களுக்காக, போக்குவரத்து நெரிசலை குறைக்க செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. GST ரோடு, வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை, OMR மற்றும் ECR சாலைகளில் வரும் 20ஆம் தேதி வரை கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. GST சாலையில் போக்குவரத்தை விரைவுப்படுத்த, ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று (17.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.