India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் வரும் பிப்ரவரி மாதம் முதல் மினி பேருந்துகளை இயக்கப்பட உள்ளன. ஏற்கனேவே, பைக் டாக்சி ஓட்டுநர்களால் ஓட்டுநர்களுக்கு சவாரி கிடைப்பதில்லை என்றும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர். அண்மையில் பைக் டாக்சியை நிறுத்த வேண்டும் என்றும் கூட ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர். தற்போது இந்த மின் பேருந்து சேவை அறிவிப்பு ஆட்டோ ஓட்டுநர்களை மேலும் கவலை அடைய வைத்துள்ளது.
சென்னையில் அடுத்த மாதம் முதல் தனியார் மினி பஸ்களை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. சோழிங்கநல்லூர், ஆலந்தூர், மணலி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே அரசு மினி பஸ்கள் இயங்கி வரும் நிலையில், கூடுதல் சேவைக்காக முதல் முறையாக தனியார் மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், நாளை (ஜன.24) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 8, 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் பட்டம் (டிகிரி) படித்தவர் பங்கேற்கலாம். 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.
வரும் 25ஆம் தேதி சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.
சென்னையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில், பொது விநியோக திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. வரும் ஜன.25ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், கைப்பேசி எண் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். யூஸ் பண்ணிக்கோங்க. மறக்காம ஷேர் பண்ணிடுங்க.
சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 25ஆம் தேதி டி20 போட்டி நடக்க உள்ள நிலையில், பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டள்ளது. கடற்கரை- வேளச்சேரிக்கு இரவு 9.50க்கு புறப்படும் ரயில் 10 மணிக்கும், இரவு 10.20க்கு புறப்படும் ரயில் 10.30 மணிக்கும் மாற்றம்செய்யப்பட்டுள்ளது. மறுமார்கத்தில் இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் சேப்பாக்கத்தில் 10 நிமிடம் நிற்கும் (10.27 PM- 10.37 PM) என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா நகர், சாந்தி காலனியில் செயல்படும் தனியார் மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு திடீர் சோதனை மேற்கொண்ட போலீசார் அதன் உரிமையாளரான திருவொற்றியூரைச் சேர்ந்த பிரேமா என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த மசாஜ் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.
சூரிய குடும்பத்தில் கோள்களின் சுற்றுவட்டப் பாதையில் ஒன்றை ஒன்று சந்திக்கும் அபூர்வ நிகழ்வு அவ்வப்போது ஏற்படும். அதன்படி 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து வரும் அரிய நிகழ்வு தற்போது நடைபெற உள்ளது. இந்நிகழ்வை, பொதுமக்கள் தொலைநோக்கி மூலம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பில்லா கோளரகத்தில் இன்று முதல் 25ஆம் தேதி வரை ஆறு முதல் இரவு 8 மணி வரை காணலாம். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் முன்பு நாம் தமிழர் கட்சியினர் குவிந்து வருகின்றனர். சமீபத்தில் பெரியாரை பற்றி அவதூறாக சீமான் பேசியது தொடர்பாக, பெரியார் உணர்வாளர்கள் சார்பில் இன்று (ஜன.22) அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது பாதுகாப்பிற்காக கட்சியினர் அவரது வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர்.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில், சுவாச பிரச்னையால் தினமும் பல குழந்தைகள் சிகிச்சைக்கு வருவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். நிமோனியா பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகளால், நுரையீரல் திசுக்களில் ஏற்படும் தொற்று தற்போது தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக, டெங்கு, கொரோனா, டைப்பாய்டு, மலேரியாவால் பாதிக்கப்பட்டோருக்கு, நிமோனியா பாதித்தால் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்
Sorry, no posts matched your criteria.