India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2025 ஜனவரி மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 23,78,989 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 1,800 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 7,219 பயணிகள், QR Code பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37,80,386 பயணிகள் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 25,30,950 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கும்பல் ராசிபுரத்தில் பிடிபட்டது. பல திருட்டு வழக்குகளில் தேடப்பட்ட சென்னையைச் சேர்ந்த டேவிட் (24), மணி, திருப்பூரைச் சேர்ந்த மணிகண்டன் (47) மூவரும் பிடிபட்டனர். கைது செய்யும்போது டேவிட், மணிகண்டன் இருவரும் தப்பி ஓடுகையில் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர், விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்கள், ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னைக்கு பாதுகாப்பான முறையில் அழைத்து வரப்பட்டனர். அவர்களை, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர். பின்னர், அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில், அனைவரையும் ராமேஸ்வரத்திற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அருண் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த சில தினங்களாக வாட்ஸ்-அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, பண இழப்பு ஏற்படுவதாக பலரும் புகார் அளித்து வருகின்றனர். இந்த புதிய வகை மோசடி குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். சந்தேகப்படும்படி அழைப்பு வந்தால் உடனே முடக்குங்கள்” என கேட்டுக் கொண்டுள்ளார். ஷேர் செய்யுங்க
தமிழ்நாட்டில் இன்று (பிப்.1) முதல் ஆட்டோ பயணக் கட்டணம் உயர்கிறது. அதன்படி, முதல் 2 கி.மீ.,க்கு ரூ.50. அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.18 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டு கட்டண நிர்ணயம் செய்த பிறகு இதுவரை கட்டணம் மாற்றி அமைக்கப்படாத நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கமே இந்த புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. ஷேர் செய்யுங்கள்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மெட்ரோ ரயில் வாட்ஸ்அப் செயலி மூலம் ஆன்லைனில் டிக்கெட்டுகள் பெறமுடியவில்லை. எனவே, பயணிகள் அனைவரும் CMRL மொபைல் ஆப், Paytm, PhonePe, சிங்கார சென்னை கார்டு, CMRL டிராவல் கார்டுகள் போன்ற மற்ற வழிகள் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோ கவுண்டர்களிலும் டிக்கெட்டு பெற்று கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ஆம்னி பேருந்து, நேற்று (ஜன.31) நள்ளிரவில் மணப்பாறை அருகே கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்தது. இதில், 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பேருந்தின் உள்ளே இருந்தவர்களை பத்திரமாக மீட்க உதவினர்.
கால்பந்து கோல் போஸ்ட் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி விமானப்படை பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்த ஆத்விக் என்ற சிறுவன் நேற்றிரவு வீட்டருகே உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக கோல் போஸ்ட் சிறுவன் மீது விழுந்தது. தலையில் பலத்த காயம் அடைந்த சிறுவன் சுயநினைவின்றி உயிரிழந்தான். குடும்பத்தார் கதறி அழுது வருகின்றனர்.
சென்னையில் 1 லட்சத்தில் 13 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு, 2022இல் கண்டறியப்பட்டுள்ளது. அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் இந்த புற்றுநோய் தரவு சேகரிக்கப்பட்டது. 2022ம் ஆண்டில், புதிதாக, 241 குழந்தைகள் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானது தெரிய வந்தது. அதில், 139 ஆண் குழந்தைகள், 102 பெண் குழந்தைகள். இவர்களில், ரத்தம் சார்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம்.
சென்னையில் இன்று (31.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.