Chengalpattu

News November 13, 2024

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க டிச.24 வரை வாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில், இரட்டை பதிவுகள் இருப்பதாகக் கூறி 2.39 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி வருகிறது. 2இல் ஒரு பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க, டிச.24ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர். எனவே, 2 முறை பதிந்துள்ள உங்கள் பெயர்களை உடனே நீக்கிவிடுங்கள்.

News November 13, 2024

பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, பெரம்பலூர், கடலூர், அரியலூர், கடலூர், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பள்ளிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 13, 2024

செங்கல்பட்டில் கொட்டித் தீர்க்கும் கனமழை

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மீனம்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், வண்டலூர், செய்யூர், மேலமையூர், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?

News November 13, 2024

அச்சரப்பாக்கத்தில் மின்கம்பங்கள் ஏற்றிச்சென்ற டாக்டர் விபத்து

image

அச்சரப்பாக்கத்தில் மின்வாரிய மின்நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து எலப்பாக்கம் கிராமத்திற்கு 6 மின்கம்பங்கள் டாக்டர் மூலமாக ஏற்றிச் சென்றது. இதில் அச்சரப்பாக்கம் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ரோகித், கிஷோர்குமார், அபிஷேக் ஆகிய மூன்று பேரும் டாக்டரில் ஏறிச் சென்றனர். டாக்டர் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிந்து விபத்துக்கு உள்ளானது. 3 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

News November 13, 2024

வேதகிரீஸ்வரர் கோயிலில் பெளர்ணமி பிரதோஷம்

image

திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் மலைக் கோவிலில் 13/11/24 ஐப்பசி வளர்பிறை பிரதோஷம், 14.11.2024 அன்று மாலை 6.00 மணிக்கு மேல் அன்னாபிஷேகம், ஐப்பசி மாத பெளர்ணமி கிரிவலம் 15.11.2024 வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணி முதல் 16.11.2024 சனிக்கிழமை அதிகாலை 3.45 வரை கிரிவலம் வர உகந்த நேரமாக உள்ளது.

News November 13, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பணி ஓய்வு பெறும் நாளில் ரூ.5 லட்சம் பணிக்கொடையாக வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் ஆண் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் உள்ள சத்துணவு பணியாளர்கள் பங்கேற்ற ஒரு நாள் அடையாளம் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

News November 12, 2024

செங்கல்பட்டில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.இதன் காரணமாக செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம்,விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News November 12, 2024

செங்கை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவு வார்டு துவக்கம்

image

வடகிழக்கு பருவமழையையொட்டி, காய்ச்சல் பிரிவுக்கு சிறப்பு வார்டு துவக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், புறநோயாளிகளாகவும், உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News November 12, 2024

செங்கல்பட்டிற்கு கள ஆய்வுக் குழு நியமனம்

image

அதிமுக சார்பில் மாவட்ட வாரியாக கட்சியின் செயல்பாடுகள், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி கள ஆய்வுக் குழுவினை அமைத்துள்ளார். அதன்படி செங்கல்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் டி.ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News November 11, 2024

காவல் கண்காணிப்பாளரிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு

image

செங்கல்பட்டு நீதிமன்றத்தைச் சேர்ந்த சுதன்குமார் என்ற வழக்கறிஞர் மீது கடந்த 7ஆம் தேதி சமூக விரோதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர். இதனால் காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

error: Content is protected !!