India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 89 டாஸ்மாக் கடைகளில் இன்று (நவ.14) முதல் மதுபாட்டில்களுக்கு டிஜிட்டல் முறையில் பில் வழங்குவது நடைமுறைப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக மென்பொருள் தயாரிக்க ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்துக்கு ₹294 கோடி மதிப்பிலான பணியாணை வழங்கப்பட்டது. இதற்காக கடந்த சனிக்கிழமை முதல் டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. ஷேர் பண்ணுங்க
வெங்கடேசபுரம் கிராம பொதுமக்கள் சார்பாக, அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம், பாதை கோரி மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக இரும்புலி கிராமத்தில் செய்யூர் வட்டாட்சியர் மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர், முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உடன் மனுதாரர்கள் இருந்தனர்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பல்லாவரத்தில் நடைபெற்ற பம்மல் வடக்கு பகுதிக் கழகச் செயலாளர் த.ஜெயக்குமார் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பெண்கள், பெண் குழந்தைகள் நலன் சார்ந்த அனைத்து அரசு துறை அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள்,மகளிர் உள்ளாட்சி பிரிதிநிதிகள், மாவட்ட உள்ளுர் புகார் குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் முன்னிலையில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் எ.எஸ்.குமாரி தலைமையில் நடைபெற்றது.
கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துமனையில் பணிபுரிந்த டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டார். இதற்கு கண்டனம் எழுந்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நாளை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.
தமிழக முழுவதும் தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஏரிகள் நிறைந்த மாவட்டம் என பெயர் பெற்ற செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 528 ஏரிகளில் தற்போது 30 ஏரிகளுக்கு மேல் 100% முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும், 64 ஏரிகள் – 75%, 115 ஏரிகள் – 50%, 163 ஏரிகள் – 25% நிறைந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, வெளியே செல்வோர் குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்துச் செல்லுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் சிறந்த 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு கேடயங்கள் வழங்க தொடக்க கல்வி இயக்குனர் கடந்த 7ஆம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, செங்கல்பட்டில் புழுதிவாக்கம் நடுநிலைப்பள்ளி, ராயமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான பாராட்டு விழா சென்னையில் வரும் 14ஆம் தேதி நடைபெறுகிறது.
செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு நிறுவனங்கள் இணைந்து, வரும் 15ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியுள்ளவர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில், 8, 10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டதாரிகள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 044 – 2742 6020, 63834 60933 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில், இரட்டை பதிவுகள் இருப்பதாகக் கூறி 2.39 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி வருகிறது. 2இல் ஒரு பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க, டிச.24ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர். எனவே, 2 முறை பதிந்துள்ள உங்கள் பெயர்களை உடனே நீக்கிவிடுங்கள்.
Sorry, no posts matched your criteria.