Chengalpattu

News March 1, 2026

செங்கல்பட்டில் அதிரடி மாற்றம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் 19 தாசில்தார்கள் மற்றும் 4 துணை தாசில்தார்களுக்கு நிர்வாக காரணங்களால் பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வந்தவர்களுக்கு இந்த மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. புதிய இடங்களில் அவர்கள் விரைவில் பொறுப்பேற்க உள்ளனர். நிர்வாக பணிகள் சீராக நடைபெற இந்த மாற்றம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 1, 2026

செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு கோர பலி

image

பள்ளிக்கரணையை சேர்ந்தவர்கள் பாலாஜி (23), கார்த்திகேயன்(23). இருவரும் கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென குறுக்கே தெரு நாய் வந்ததால் நிலை தடுமாறி அவர்கள் இருவரும் சாலையில் விழுந்தனர். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் உடல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

News March 1, 2026

செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (பிப்-28) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.01) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 28, 2026

செங்கல்பட்டு: குடும்பத்தில் பிரச்னையா?

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இந்த எண்ணிற்கு (181) அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 28, 2026

செங்கை: சிலிண்டர் உள்ளதா? இத தெரிஞ்சிக்கோங்க

image

செங்கல்பட்டு மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போட வருபவர்கள் Bill விலையை விட கூடுதலாக பணம் கேட்டால், இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணிலோ அல்லது<> இந்த இணையதளத்தில் <<>>உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News February 28, 2026

செங்கை: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News February 28, 2026

செங்கையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

செங்கல்பட்டு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<> Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News February 28, 2026

வண்டலூர்: சிறுமி வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டு சிறை

image

வண்டலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் சங்கர் என்பவர் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று சங்கர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூபாய் 3,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.

News February 28, 2026

செங்கல்பட்டு: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, சென்னை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க.

News February 28, 2026

செங்கல்பட்டு: தமிழகத்தின் மிகப்பெரிய போர்க்களம்!

image

சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக மீண்டும் உருவெடுத்துள்ளது. இங்கு சுமார் 5.36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியை கைப்பற்றுவது அரசியல் கட்சிகளுக்கு ஒரு கௌரவப் பிரச்சினையாக மாறியுள்ளது. தற்போது திமுகவின் எஸ். அரவிந்த் ரமேஷ் MLAவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!