Chengalpattu

News November 15, 2024

நந்திவரம் பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆட்சியர்

image

நந்திவரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார். இதில், எவ்வாறு படிப்பது, உயர்கல்வி நிறுவனங்களில் எவ்வாறு சேர்வது, நேர மேலாண்மை, பொழுதுபோக்கு, விளையாட்டில் ஆர்வம் செலுத்துதல், இலக்குகளை தீர்மானித்தல், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு இலக்குகளை அடைதல், உயர் பதவிகள் பெற்று சமூகத்திற்கு சேவை செய்தல் போன்ற தகவல்கள் சார்ந்து கலந்துரையாடி விளக்கங்கள் பெற்றனர்.

News November 15, 2024

வாழ்வாதார பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குழந்தைகள் நலன், சிறப்புச் சேவைகள் துறையில் பதிவு செய்துள்ள குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மாவட்ட திறன்வளர்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் வாழ்வாதார பயிற்சிகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பயிற்சி நிறைவடைந்ததற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வழங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News November 14, 2024

குழந்தைகளுடன் கேக் வெட்டி மகிழ்ந்த ஆட்சியர்

image

தேசிய குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் குழந்தைகளுடன் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மாணவ, மாணவிகள் உள்ளனர்.

News November 14, 2024

தமிழ்நாடு அளவிலான கிரிக்கெட் போட்டியில் செங்கல்பட்டு மாணவி

image

கோவளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி நளிணா, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிக்கு தமிழ்நாடு அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவரை மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ், நேரில் அழைத்து, பாராட்டி விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News November 14, 2024

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பேரணி

image

வெண்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளி முதல் மாவட்டஆட்சியர் அலுவலக வளாகம் வரை, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி (யோகா) மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கொடி அசைத்து துவங்கி வைத்தார். குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், “Walk for Children” என்ற தலைப்பில் இந்த பேரணி நடைபெற்றது.

News November 14, 2024

தேசிய டிராக் சைக்கிளிங் போட்டி நாளை தொடக்கம்

image

76ஆவது சீனியர் தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி, வண்டலூர் மேலக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள சைக்கிள் ஓடுதளத்தில் நாளை (நவ.15) கோலாகலமாக தொடங்க உள்ளது. வரும் 19ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில், 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 700 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 

News November 14, 2024

கல்வி உதவித் தொகை வழங்குவதில் சிக்கல்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக, 8,520 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களின் ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். ஒரு மாதத்திற்குள் பணி முடிந்ததும் மீண்டும் உதவித்தொகை அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2024

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆன்லைன் கட்டணம்

image

வண்டலுார் உயிரியல் பூங்காவில், ஆன்லைன் நுழைவு கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது. முறையான அறிவிப்பு இன்றி, நேரடியான டிக்கெட் முறை ரத்து செய்யப்பட்டதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர். இதையடுத்து, சிறுவர்கள், பெரியவர்கள் என்றும், எத்தனை டிக்கெட்டுகள் வேண்டும் என்றும் தெரிவித்து UPI மூலம் பணம் செலுத்தி ஆன்லைனில் நுழைவு கட்டணத்தை டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.

News November 14, 2024

நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், நாளை (நவ.15) தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியுள்ளவர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில், 8, 10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டதாரிகள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 044 – 2742 6020, 63834 60933 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News November 14, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 10 மணி வரை செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது.

error: Content is protected !!