Chengalpattu

News November 16, 2024

செங்கல்பட்டில் வாக்காளர் சிறப்பு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்டதில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில், சிறப்பு முகாம்கள் இன்று முதல் நடைபெறுகிறது. பெயர் சேர்த்தல் (Form 6), இடமாற்றம் (Form 7), தொகுதி மாற்றம் மற்றும் அடையாள அட்டை நகல் (Form 8) ஆகியவற்றை பெற்று, பூர்த்தி செய்து தர வேண்டும். மேலும் விபரங்களுக்கு 1950, மாவட்ட தேர்தல் அலுவலக தொலைபேசி 044 – 2954 1715 எண்ணை தொடர்பு கொள்ளலாம். இரட்டை பதிவு உள்ளவர்கள் ஒன்றை நீக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News November 15, 2024

ஆயிரம் வகையான ஆம்லெட்டுகள் தயாரித்து சாதனை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஹோட்டல் மேலாண்மை மாணவர்கள் புதிய விதமான உலக சாதனையை படைத்துள்ளனர். 10 நிமிடத்தில் ஆயிரம் வகையான ஆம்லெட்டுகளை தயார் செய்து அந்த ஆம்லெட்டுகளை சரியான முறையில் தட்டுகளில் வைத்து வரிசையாக அடுக்கினர். பல்வேறு வகையான ஆம்லெட்டுகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அவர்களுக்கு சாதனை படைத்தற்கான விருதும் வழங்கப்பட்டது.

News November 15, 2024

நாளை மறுநாள் சென்னை கடற்கரை-தாம்பரம் ரயில்கள் ரத்து

image

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே நாளை மறுநாள்  (நவ 17) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.காலை மணி முதல் மாலை 5 மணி வரை பல்லாவரம்-கடற்கரை இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 15, 2024

சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கி வைத்த உதயநிதி

image

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம், மேலக்கோட்டையூர் ஊராட்சியில் உள்ள தமிழ்நாட்டு விளையாட்டு துறை கல்லூரியில் நேஷனல் ட்ராக் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பரசன் இணைந்து துவக்கி வைத்தனர். இதில், திருப்போரூர் பெருந்தலைவர் எல்.இதயவர்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News November 15, 2024

செங்கல்பட்டிற்கு புதிய மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் செய்தி தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த ஜெயலலிதா பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து ராமகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று ராமகிருஷ்ணன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, உடன் பணியாற்றுபவர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

News November 15, 2024

வண்டலுார் பூங்காவில் நேரடி டிக்கெட் கவுண்டர் திறப்பு

image

வண்டலுார் உயிரியல் பூங்காவில் முன்னறிவிப்பு இன்றி, நேற்று ஆன்லைன் டிக்கெட் முறை அமலானது. இதனால், பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, ஒரு நேரடி டிக்கெட் கவுண்டராவது இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, ஒரு நுழைவு டிக்கெட் கவுண்டர், ஒரு பேட்டரி வாகன கவுண்டர் மீண்டும் திறக்கப்பட்டு, நேற்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை, பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

News November 15, 2024

அரசு வேலை வாங்கித் தருவதாக ரு.10 லட்சம் மோசடி

image

பல்லாவரம் ஜீவன் நகரைச் சேர்ந்த ஸ்டெல்லா மேரி (42), கண்டோன்மென்ட் பள்ளியில் தூய்மை பணியாளராக வேலை செய்கிறார். இவரது மகனுக்கு கண்டோன்மென்ட் நிர்வாகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அங்கு ஓட்டுநராக பணிபுரியும் நிலோஷ் மோகன் (36), ரூ.10 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு போலி பணி ஆணையை வழங்கியுள்ளார். வேலைக்கு சென்றபோது அது போலி என தெரியவர, இதுகுறித்த புகாரின் பேரில் பல்லாவரம் போலீசார் கைது செய்தனர்.

News November 15, 2024

குளிக்கச் சென்றபோது குளத்தில் மூழ்கி மாணவர் பலி

image

கோவிலம்பாக்கம் அருகே எஸ்.கொளத்தூரைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவரது மகன் கமலக்கண்ண (14) கோவிலம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை 5 மணி அளவில் நண்பர்களுடன் சுண்ணாம்பு கொளத்தூர் சிவா விஷ்ணு கோயில் குளத்தில் குளிப்பதற்காகச் சென்றார். நீச்சல் தெரியாத கமலக்கண்ணன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

News November 15, 2024

செங்கல்பட்டில் கனமழை பெய்து வருகிறது

image

சென்னையைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்திலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், மதுராந்தகம், பெருங்களத்தூர், கோவளம், காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கவனமாக செல்லவும். உங்க ஏரியாவில் மழையா?

News November 15, 2024

நந்திவரம் பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆட்சியர்

image

நந்திவரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார். இதில், எவ்வாறு படிப்பது, உயர்கல்வி நிறுவனங்களில் எவ்வாறு சேர்வது, நேர மேலாண்மை, பொழுதுபோக்கு, விளையாட்டில் ஆர்வம் செலுத்துதல், இலக்குகளை தீர்மானித்தல், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு இலக்குகளை அடைதல், உயர் பதவிகள் பெற்று சமூகத்திற்கு சேவை செய்தல் போன்ற தகவல்கள் சார்ந்து கலந்துரையாடி விளக்கங்கள் பெற்றனர்.

error: Content is protected !!